சிமென்ட் கான்கிரீட்டுக்கு மாற்றாக,புதிய கான்கிரீட் கலவை ! சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடிப்பு !!

சிமென்ட் கான்கிரீட்டுக்கு மாற்றாக, சுண்ணாம்பு மற்றும் நிலக்கரி சாம்பல் பயன்படுத்தி, புதிய கான்கிரீட் கலவையை, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாடு முழுவதும் கட்டுமான பணிகளுக்கு, சிமென்ட் கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. சிமென்ட், தண்ணீர் மற்றும் சில ரசாயனம் பயன்படுத்தி, சிமென்ட் கான்கிரீட் தயார் செய்யப்படுகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, மாற்று கலவையை, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பிரிவு கண்டறிந்துள்ளது.ஸ்விட்சர்லாந்து நிறுவனம் ஒன்றுடன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், சென்னை ஐ.ஐ.டி.,யின், சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் மனுசந்தானம் தலைமையிலான குழுவும் இணைந்து, ஆராய்ச்சி செய்து, இந்த கலவையை கண்டுபிடித்துள்ளது. சுண்ணாம்பு, களிமண் மற்றும் நிலக்கரி சாம்பல் பயன்படுத்தி, நீண்ட காலம் வலுவாக இருக்கும், கான்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts: