சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி செய்ய முடியாமல் தவிப்பு ? இன்சுலின் விற்பனை அதிகரிப்பு !

ஊரடங்கு உத்தரவால் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட கடற்கரை பகுதிகளும், தினமும் நடைபயிற்சி சென்று பழகியவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கொரோனா பரவும் வேளையில் நடைபயிற்சி முக்கியம் அல்ல. உயிர்தான் முக்கியம் என்ற மனநிலையில் பலர் நடை பயிற்சியை முழுமையாக கைவிட்டு தங்களது வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள்.

நடைபயிற்சி, உடற்பயிற்சி மூலம் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்த சர்க்கரை நோயாளிகளில் ஒரு சிலர் தற்போது ரத்த பரிசோதனை மையங்களுக்கு சென்று பரிசோதித்து கொள்கிறார்கள். பெரும்பாலானோர் தங்களுடைய வீடுகளில் வாங்கி வைத்துள்ள கருவி மூலம் பரிசோதித்து கொள்கிறார்கள். இந்தநிலையில் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ‘இன்சுலின்’ மருந்துகள் விற்பனை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.