கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாடு !

சென்னையில் உள்ள முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான கிங்க்ஸ் பொறியியல் கல்லூரியில் அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகளில் “கம்ப்யூட்டிங், கம்யூனிகேஷன் மற்றும் நெட்வொர்க்கிங் டெக்னாலஜிஸ் ( ஜி.சி.ஆர்.டி சி.சி.என்.டி’19)” இன் சமீபத்திய போக்குகள் குறித்த எல்சேவியர்-எஸ்.எஸ்.ஆர்.என் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான 127 உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட பிரிதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த மாபெரும் சர்வதேச மாநாட்டை கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் திரு.எஸ். அமிர்தராஜ் அவர்கள் முன்னிலையில் காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி துணைவேந்தர் டாக்டர் பி.மன்னர் ஜவஹர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் இம்மாநாட்டில் தென் கொரியா ஹன்னம் பல்கலைகழகத்தில் எமரிட்டஸ் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் குங்- டே கிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இம் மாநாட்டின் சிறப்பு அம்சமாக பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவில் இருந்து உலகை காப்பாற்ற ஐ.நா வில் கிரேட்டா தன்பெர்க் மன்றாடிய இந்த சூழ்நிலையில் அழிவிலிருந்து உலகை மீட்க சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க மரம் வளர்ப்பதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்தவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை கொண்ட கல்லூரி வளாகம் “கோ-கிரீன்” இயக்கத்திற்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்பதற்காகவும் கல்லூரி வளாகத்தில் மேலும் 200 மரக்கன்றுகள் நடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

டாக்டர் பி. மன்னா ஜவஹர் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினரான குங்-டே கிங் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு இந்த நிகழ்வை தொடங்கி வைத்தனர்.கம்ப்யூட்டிங், கம்யூனிகேஷன் மற்றும் நெட்வொர்க்கிங் டெக்னாலஜிஸ் ( ஜி.சி.ஆர்.டி சி.சி.என்.டி’19) மாநாட்டில் இந்தியா மற்றும் பல நாடுகளின் கல்வி நிறுவனங்களிலிருந்து 196 கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. பல்வேறு கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பொருள் வல்லுநர்களால் 127 கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டன.கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் திரு.எஸ்.அமிர்தராஜ் அவர்கள் விருந்தினர்களை வரவேற்று இம் மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

டாக்டர் பி.மன்னர் ஜவஹர் அவர்கள் தனது சிறப்பு உரையில்”இருப்பத்தாயிரம் நூற்றாண்டில் மனிதகுலம் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களைத் தீர்க்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளையும் நிபுணர்களையும் ஒன்றிணைப்புது மற்றும் பல்வேறு ஆராய்ச்சி செய்வது முக்கியம் என்றார்.

சிறப்பு விருந்தினரான டாக்டர் குங்-டே கிங், தனது முக்கிய உரையில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் மூலம் கற்றல் மற்றும் ஆழமான கற்றல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

இம் மாநாட்டில் புத்தக வெளியீட்டு காப்புரிமை பெற்றதற்காக கிங்ஸ் பொறியியல் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பேராசிரியர்கள் டாக்டர் ஏ.செந்தில்குமார், திருமதி.வ.கவிதா ஆகியோர் டாக்டர் பி.மன்னர் ஜவஹர் அவர்களால் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் தொழில் முனைவோர் வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக சிறந்த தொழில் திட்ட வடிவமைப்புக்காக தெரிவு செய்யப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் நான்காம் ஆண்டு பயிலும் எமது மாணவர்கள் டி.ஆலன் ஜாக்சன் ஜே.ஜோகவா அற்புதராஜ் ஆகியோருக்கு தொழில் தொடங்குவதற்காக “தேர்ட் வேர் சொலுஷன்ஸ் லிமிடெட்” நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு. சதீஷ் மேனன் அவர்கள் முறையே ரூ.1,54,000/- மற்றும் ரூ.1,82,000/- ரொக்கமாக வழங்கினார்.

இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களின் நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஈர்த்தது. மாணவர்கள் உயர் கல்வியில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் நிபுணத்துவும் பெறவும் ஊக்கமளிப்பதாக அமைந்தது