எஸ்.பி.வேலுமணியுடன் ரெய்டில் சிக்கிய நந்தகுமாருக்கு திமுக ஆட்சியில் பதவி உயர்வா..? மர்மம் என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரெய்டு நடந்தது. அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளிலும், சோதனை செய்யப்பட்டது. அப்போது சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சென்னை பெருநகராட்சியில் ரூ. 1, 000 கோடி கமிஷன் மற்றும் லஞ்சம் லாவண்யம் வாங்கிக் கொடுத்ததைப் பாராட்டி சென்னை பெருநகர தலைமை பொறியாளர் நந்தகுமாருக்கு பதவி உயர்வு கிடைக்கும் என பெருமூச்சு விடுகிறார்கள் சென்னை பெருகராட்சி அதிகாரிகள். இத்தனைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரெய்டு நடந்தது. அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் வீடுகளிலும், சோதனை செய்யப்பட்டது. அப்போது சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சென்னை பெருநகராட்சி அதிகாரிகள் தங்களது உள்ளக்குமுறலை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். ‘’திமுக ஆட்சிக்கு வந்ததும் எத்தனையோ நேர்மையான உயரதிகாரிகள் பணியிடமாற்றம், பதவி மாற்றம் செய்யப்பட்ட போதும் இந்த நந்தகுமார் மட்டும் அதே பணியிடத்தில் அமர்ந்து கோலோச்சி வருகிறார். இத்தனைக்கும், திமுக ஆட்சிக்கு வரும் முன்பே, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசிய இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது அமைச்சரவை சம்பந்தப்பட்டவர்கள், டெண்டர்கள் முறைகேடாக செயல்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது தமது ஆட்சி அமைந்தவுடன் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன் என கொங்கு கோட்டையில் மார்தட்டினார்.

அவர் சொன்னதுபோல் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து எஸ்.பி.வேலுமணி இல்லத்திலும் நெருங்கிய நட்பு வட்டாரங்களின் இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. ஆனால், வேலுமணி, எதிர்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். அவரது நட்புகள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களது விவகாரம் வேறு. தலைமை பொறியாளராக உயர்பதவியில் இருந்த, இருக்கிற நந்தகுமாரின் விவகாரம் வேறு. நந்தகுமாரை மேலே சொன்னது போல் பணியிடம், பதவி மாற்றம் செய்திருக்கலாம் இந்த தமிழ்நாட்டின் அரசு. ஆனால் அதற்கு பதிலாக மேலும் பதவி உயர்வு கொடுக்க தயாராக இருக்கிறது இந்த திமுக அரசு. நந்தகுமார் ஐ.ஏ.எஸ் பதவிக்கு இணையாக சென்னை மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் என்ற பலகையை மாட்டி விரைவில் கிளம்பி விடுவார் போல.

எம்எல்ஏ இல்லாமல் முதல்வர் ஆகி ஆறு மாதத்தில் எம்எல்ஏ ஆக சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முதல்வர் ஆகி விடலாம். ஆனால், ஐ.ஏ.எஸ்., பதவி, அல்லது அதற்கு ஈடான பதவியை அவ்வளவு எளிதில் எட்டிவிட முடியாது. ஆனால் அவரது தொடர்புகளை வைத்து இந்த பதவியை அடைந்து விடத்துடிக்கிறார் நந்தகுமார். இதற்கெல்லாம் திமுக அரசு வளைந்து கொடுக்க காரணம் என்ன? நேர்மையான அதிகாரியான ககந்தீப் சிங் பேடி நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறார். ஆனால் அவரது கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மேலிடத்தில் இருந்து ககந்தீப்சிங் பேடிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். எஸ்.பி.வேலுமணியும், அவரது சகோதரர் அன்பரசுவும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவர்களால் நியமிக்கப்பட்டுள்ள பொ.குமாரின் மைத்துனர் இந்த நந்தகுமாரை வைத்து திமுகவுடன் எஸ்.பி.வேலுமணி பேரம் பேசுகிறார்கள். எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசுக்கு நெருக்கமானவர் இந்த நந்தகுமார்.

தான் சம்பாதித்த பலநூறு கோடிகளில் பாதியை நந்தகுமார் கொடுக்க முன் வந்துள்ளார். அதே போல் அன்பரசனும், அவரது சகோதரருமான அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும் சில கோடி ரூபாய்களை திமுக ஆட்சித் தலைமைக்கு கொடுக்க பேரம் பேசப்பட்டு வருகிறார்கள். அந்த டீல் பாதி முடிந்து விட்டது. அதனால்தான் நந்தகுமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த டீல் ஒத்துவராவிட்டால் நந்தகுமார் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அப்ரூவராக மாறவும் தயாராக உள்ளார். ஆனால், அதிமுக ஆட்சியில் சம்பாதித்தவர், திமுக ஆட்சியிலும் சம்பாதித்து நாளை திமுக ஆட்சிக்கும்  துரோகம் விளைவிக்க மாட்டாரா? என்பதை இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்கிறார்கள் சென்னை பெருநகராட்சி நேர்மை அதிகாரிகள்.