உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.மல்லுக்கட்டும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்.

 

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.மல்லுக்கட்டும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள். அசைந்து கொடுக்காத இபிஎஸ் ஓபிஎஸ். என்ன நடக்கப் போகுது.தமிழ்நாட்டில் விரைவில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலும், நகராட்சி தேர்தலும் நடக்கப் போகுது. இதில அதிமுக தனித்து போட்டியிடணும்னு அதிமுக நிர்வாகிகள் சொல்லிட்டு வர்றாங்க.. பாஜக உடன் இனியும் கூட்டணி வேண்டாம்னு நிர்வாகிகள் குமுறுவதாக கூறப்படுகிறது.இதுக்கு பல காரணங்கள் சொல்லப் படுது. இன்னமும் தமிழக மக்கள் மத்தியில் மத்திய அரசு மேல் கோபம் இருந்து கிட்டே வருது.பெட்ரோல் விலை உயர்வு கேஸ் விலை உயர்வுன்னு நெறைய சொல்லிகிட்டே போகலாம்.தமிழக அரசு பெட்ரோல் விலையில் ₹ 3 ரூபாய் கொறைக்கும் போது மத்திய அரசால் ஏன் கொறைக்க முடியலன்னு கேள்வி கேக்குறாங்க.இது கீழ் மட்டத்தில எறங்கி பிரச்சாரம் பண்றவங்களுக்குத் தான் தெரியும்.ஜீப்ல வேன்ல நின்னு பிரச்சாரம் பண்ற மேல்மட்டத் தலைவர்களுக்குத் தெரியாது அதனால்தான் பாஜகவோட கூட்டணி வேண்டாம்னு சொல்றாங்க. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற போகுது. செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்குது. தேர்தல் அறிவிப்பு வர்ற வரைக்கும் உறுதியா சொல்ல முடியாது.இந்த தேர்தல் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கணும்னு உச்ச நீதிமன்றம் கெடு விதிச்சிருக்கிறதால , இதற்கான பணிகள்ல மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருது. 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கான, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை விரைவில் நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது. வார்டு வரையறை செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்னு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதிமய்யம் உள்பட பல்வேறு கட்சிகளும் தயாராகி வர்றாங்க. சட்டசபை தேர்தலில் தோற்றுபோன. அதிமுக , உள்ளாட்சி தேர்தல் வெல்வதற்கு தீவிரமாக ஆயத்தமாகி வருது. வெறும் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுகவைவிட திமுக அதிக வாக்குகள் வாங்கியிருப்பதால் எப்படியாவது தீவிராக வேலை செய்தால் வெற்றி நிச்சயம்னு மூத்த தலைவர்கள் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி வர்றாங்களாம். ஆனா நிர்வாகிகளோ பாஜகவை உள்ளாட்சி தேர்தலில் கழட்டிவிடணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறாங்களாம் பாஜகவோட கூட்டணி வைச்சதாலத்தான் சட்டசபை தேர்தலில் தோத்துப்போனோம்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்னு நிர்வாகிகள் எல்லாரும் கோரஸா சொல்றாங்களாம். சமீபத்தில விழுப்புரம் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள், வருகிற உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரடியாக கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுது. ஏற்கனவே, சி.வி.சண்முகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைச்சதாலத்தான் தோல்வி அடைஞ்சோம். அதனால், பாஜவுடன் இனி தேர்தல் கூட்டணி கிடையாதுன்னு வெளிப்படையாகவே பேசினாரு. இதே கருத்தைத்தான் பல அதிமுக நிர்வாகிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வர்றாங்களாம். மறைந்த எம்ஜிஆர், முதல் ஜெயலலிதா வரை சிறுபான்மை மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால், இப்போ பாஜக தலைமை கொடுக்கும் நெருக்கடி காரணமாக கூட்டணி வைக்க வேண்டிய நிலைமை கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை உடைத்து வெளியே வரணும்னு அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாக தலைமைக்கு கோரிக்கை வைக்க தொடங்கி இருக்கிறாங்க. ஆனா இபிஎஸ் ஓபிஎஸ்ஸால முடிவெடுக்க முடியலை முன்னாள் அமைச்சர் சண்முகம்போல மேலும் பல மாவட்டங்களிலும் இதே கோரிக்கையை நிர்வாகிகள் எழுப்பத் தொடங்கிட்டாங்க. பாஜகவை சேர்ப்பதால் உள்ளாட்சிகளில் நாம் படுதோல்வியை சந்திக்க வேண்டியது வரும்னு தலைமையை எச்சரிக்கத் தொடங்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஆனால் கட்சி முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தாலும், அதிமுகவின் முன்னணி தலைவர்கள் அதிரடியாக பாஜவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட முடியாமல் தவித்து வருகிறார்களாம். ஆனா பாஜகவுக்கும் தனித்துப் போட்டியிடலாமாங்கிற ஒரு யோசனையும் இருக்குதாம்.எல்.முருகனுக்கு ராஜ்யசபா சீட் தராத கோபத்தில இருக்கும் பாஜக என்ன முடிவெடுக்க போகுதுன்னு பொறுத்திருந்து தான் பாக்கணும்.

Related posts:

யாத்திசை - விமர்சனம்!
தயாரிப்பாளர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுக்கும் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் 'ஃபயர்' !
நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் 'அக்யூஸ்ட்'!
விமல் நடிக்கும் புதிய படம் 'பரமசிவன் பாத்திமா', காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது!
சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்!
இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியாரை ஈர்க்க ஒப்பந்தம் ?
“சந்திரமுகி 2” படத்திலிருந்து, கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !