‘வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை; தொழில்நுட்ப கோளாறுகளால் பணம் வரவில்லை எனில், அது போன்ற பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர்களின் இலவச, ஏ.டி.எம்., பரிவர்த்தனை கணக்கில் சேராது’ என, இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:தொழில்நுட்ப கோளாறு, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை உட்பட, பல்வேறு காரணங்களால், பணம் எடுக்காத பரிவர்த்தனைகளும், இலவச, ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளுக்குள் உள்ளடக்கப்படுவதாக, தெரிய வந்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு, தொடர்பு பிழைகள், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை, வங்கி மற்றும் சேவை வழங்குவோரால் ஏற்படும் தவறுகள், தவறான ரகசிய குறியீட்டு எண் உட்பட, பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் பரிவர்த்தனைகளை, வாடிக்கையாளர்களின் இலவச, பரிவர்த்தனை கணக்கில் சேர்க்க கூடாது. இதற்கான சேவைக் கட்டணமும் வசூலிக்க கூடாது.மேலும், வங்கி கணக்கில் இருப்பு தொகையை விசாரித்தல், காசோலை புத்தகம் கோரல், வரி செலுத்துதல், பண பரிமாற்றம் செய்தல் போன்ற, பணம் அல்லாத பரிவர்த்தனைகளும், இலவச பரிவர்த்தனை கணக்கில் சேராது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
மினிமம் பேலன்ஸ் விதிகள் ரத்து? மறுபரிசீலனை செய்கிறது ரிசர்வ் வங்கி ?
நிதி மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து அரசு புது செயல் திட்டம் !
“பேங்க் ஆஃப் பரோடாவின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்யலாம்” ?
பேடிஎம் வாடிக்கையாளரா நீங்க ? அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..?
வருமானவரித்துறை தாக்கல் செய்வதற்கான முக்கிய அம்சங்கள்!
இந்தியாவில் 3 வகையான வங்கிகளே செயல்பாட்டில் இருக்கும் ? நிதித்துறைச் செயலாளர் தடாலடி.
டெபிட் அட்டைகள் இன்றி ஏடிஎம் -ல் பணம் எடுப்பது எப்படி?
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேம்படுத்த புதிய குழு !