இன்றைய ராசிபலன்கள் !

மேஷம்
எதிலும் நியாயமாக நடக்கவேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் மிகவும் அமைதியாகப் பேசி, பணிவாக நடத்தல் அவசியம்.

ரிஷபம்
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும்.. புத்தாடை மற்றும் புதிய நகைகள் அணிவர். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொண்டு ஏற்றம் அடைவர்.

மிதுனம்
கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் ஆரோக்கியம் மேம்படும். தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும்.

கன்னி
எதிர்பார்ப்புக்கு மேல் பலவகையிலும் பணவரவு கூடும். உடன் பிறப்புக்களால் உதவி உண்டு. அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள்.

மகரம்
சுகம், சந்தோஷம், உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். செல்வம் சேரும்.

கடகம்
பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். கௌரவக் குறைச்சல் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது. மனைவி, மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

சிம்மம்
தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. தடைபடும் காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சித்து, முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.

துலாம்
வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க வாய் வார்த்தைகளைக் கட்டுப்படுத்தவும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.

தனுசு
தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால், பெண்களால் விரயச்செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி அலைய நேரும்.

விருச்சிகம்
வாழ்வில் எல்லா வளமும் பெருகும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்.

கும்பம்
தன்னம்பிக்கை, தேகதிடம், வீரம், தைரியம் எல்லாம் ஓங்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள உயர்பதவிகள் கிடைக்கும்.

மீனம்
தீர்த்த யாத்திரை, இன்பச் சுற்றுலா, குறுகிய தூரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளைச் சந்திப்பதனால் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்.