இணையதளம் மூலம் கற்பிக்கும் இதர ஐ.ஐ.டி களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி இணைகிறது .!

ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட் ஆகிய துறைகளில் அடியெடுத்து வைக்கிறது . – ஐஐடி மெட்ராஸ் , இணையதளம் மூலம் கற்பிக்கும் இதர ஐ.ஐ.டி. களின் பட்டியலில் இணைகிறது . இதன் தொடர்ச்சியாக , ஆன்லைன் கோர்ஸ்களை வழங்குகிறது ஐஐடி மெட்ராஸ் .: என்.ஆர்.ஐ.எஃப் தரவரிசையில் தொடர்ந்து நான்கு முறை முதலிடம் பெற்ற பொறியியல் நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் , ஐ.ஐ.டி மெட்ராஸ் உடன் இணைந்து அப்க்ராட் எஜுகேஷன் ப்ரைவேட் லிமிடெட் இயந்திர கற்றல் மற்றும் க்ளவ்ட் தொழில்நுட்பத்தில் உயரிய சான்றிதழ் படிப்பாக தனித்துவமிக்க பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது , ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆடிட்டோரியத்தில் உள்ள மத்திய விரிவுரை அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் இப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது . ஐ.ஐ.டி மெட்ராஸின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜானகிராம், சதீஷ் தவான் பேராசிரியர் , இஸ்ரோ & முன்னாள் இஸ்ரோ எஸ்.டி. எஸ்.சி.யின் முன்னாள் சிறப்பு விஞ்ஞானி மற்றும் இணை இயக்குனர் டாக்டர் சேஷகிரி ராவ் மற்றும் அப்க்ராட் இணை நிறுவனர்கள் ரோனி ஸ்க்ரூவாலா,மயங்க் குமார், பால்குன் கொம்பள்ளி. ஆகியோர் முன்னிலையில் இப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது ,

அதிநவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கற்கும் தளத்தில் , தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுடன் வழங்கும் ‘ அப்க்ராட் ‘ ஐஐடி மெட்ராஸுடன் கூட்டு சேர்ந்திருப்பது வெளிப்படையான மிகப் பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறது . ஏனெனில் ஐஐடி மெட்ராஸ் , முதல் முறையாக இந்த புதிய பாடப்பிரிவுகளில் களம் இறங்குகிறது . இன்று தொடங்கப்பட்ட புதிய பாடத்திட்டம் 9 மாத சான்றிதழ் பாடத்திட்டமாகும் , இதன் கட்டணம் 2 லட்சம் ரூபாய் . ஐஐடி மெட்ராஸை சேர்ந்த பேராசிரியர் ஜானகிராம், மற்றும் ஃப்ளிப்கார்ட் க்ராமேனர் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அந்தந்த பாடப்பிரிவு தொடர்பான வல்லுநர்கள் கற்பிப்பார்கள் . இந்த SME – களின் வழிகாட்டுதலின் கீழ் 100 + மணிநேர தொழில்துறை பாடத்திட்டங்கள் இந்த புதிய பாடத்திட்டத்தில் அடங்கும் . மேலும் இப்பாடதிட்டத்தில் படிப்பவர்கள் அனைவரும் அப்க்ராட்டின் தொழில்வாய்ப்பு ஆதரவையும் பெறமுடியும் .

புதிய பாடத்திட்டம் அறிமுக விழாவில் பேசிய’அப்க்ராட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் . ரோனி ஸ்க்ரூவாலா பேசுகையில் , ” ஐஐடி மெட்ராஸ் நமது நாட்டின் முதன்மையான கல்விநிறுவனங்களில் ஒன்றாகும் . தன்னுடைய புதுமையான மற்றும் முன்னோக்கு சிந்தனைக்கு பெயர் பெற்றது , ‘ அட்வான்ஸ்ட் சர்டிஃபிகேஷன் மெஷின் லேர்னிங் & க்ளவ்ட் ‘ என்ற உயரிய சான்றிதழ் பாடத்திட்டத்தை தொடங்குவதில் , ஐஐடி மெட்ராஸ் உடன் நாங்கள் இணைவதில் அப்க்ராட் பெருமிதம் கொள்கிறது . இன்னும் வரவிருக்கும் பல திட்டங்களில் இது முதலாவதாகும் . இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நம்முடைய வாழ்க்கையில் நீண்டகாலம் பங்காற்றும் என்பதால் , இதைக் கற்பதற்கு இது மிகச்சரியான தருணமாகி இருக்கிறது . எனவே இந்த பாடத்திட்டத்திற்கு தேவையான , ஐஐடி மெட்ராஸின் ஆழ்ந்த நிபுணத்துவத்துடன் , எங்களது தளத்தில் இந்த பாடத்திட்டத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் . ” அப்க்ராட் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மயங்க் குமார் கூறுகையில் , ” அப்க்ராட் நடத்திய நுகர்வோர் விருப்பத்தேர்வில் பதிலளித்தவர்களில் 54 % பேர் , டேடா மற்றும் இயந்திர கற்றல் துறை அல்லாமல் வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும் டேடா மற்றும் இயந்திர கற்றல் துறை மாற விரும்புகிறார்கள் என தெரிவித்திருக்கிறது . ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து நாங்கள் வழங்கும் பாடத்திட்டத்திற்கான அவசியத்தை இது உணர்த்துகிறது . இந்தத் திட்டம் இன்றைக்கு அதிகம் தேவைப்படும் திறன்களை வழங்கும் , அதனால் இத்துறையில் தேர்ச்சிப்பெற்ற தொழில் வல்லுநர்கள் அவர்களின் வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொட உதவும் . நாட்டின் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸுடனான எங்கள் கூட்டு முயற்சி , எங்களுடய

அப்க்ராட் கல்லூரி மாணவர்கள் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தரவு அறிவியல் , தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் திட்டங்களை வழங்குகிறது . இந்த திட்டங்கள் ஐ.ஐ.ஐ.டி-பி , பிட்ஸ் பிலானி , மிகா , கேம்பிரிட்ஜ் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூல் எக்ஸிகியூட்டிவ் எஜுகேஷன் மற்றும் இதர நிறுவனங்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன . கற்கும் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக , ஒரு முழுமையான கல்வி கற்கும்சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது , இதில் ஒருவருக்கு ஒருவர் வழிகாட்டுதல் , பியர்-டு-பியர் கற்றல் , இண்டஸ்ட்ரி நெட்வொர்க்கிங் மற்றும் மிக முக்கியமாக ஒரு நிபுணர் வழங்கும் தொழில் வழிகாட்டுதல் ஆகியன அடங்கும் , இது கற்பவர்கள் தங்களது தொழிலில் அடுத்தக்கட்டத்தை அடைவதற்கான திறன் மேம்பாட்டு ஆதரவை அளிக்கிறது ,இந்நிறுவனம் 2019-ம் ஆண்டில் IAMAI ஆல்’ கல்விக்கான சிறந்த தொழில்நுட்பம் என விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது…