அதிகமாக தூங்கினால் வரும் பிரச்சினைகள் !

வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் தூங்குவது உங்களுக்கு தலைவலி மற்றும் மைக்ராய்ன்களை தூண்டும். இதற்கு காரணம் நரம்பிய கடத்திகளில் ஏற்படும் செரோடினின் அளவின் மாறுபாடு அதிகரிப்பது ஆகும். அதிக நேரம் தூங்குவது உங்களின் காலை நேர பணிகள் முழுவதையும் முடக்கும்.

முதுகு வலி ஏற்பட செய்யும். உங்களுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தால் அதற்கு காரணம் நீங்கள் அதிக நேரம் தூங்குவதாகத்தான் இருக்கும். நீண்ட நேரம் ஒரே நிலையில் படுத்திருப்பது உங்கள் தசைகளில் விறைப்பு மற்றும் வலியை கூட்டுகின்றது . முதுகு வலி உள்ளவர்களை மருத்துவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆகவே அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.