லியோ ஹம்சவிர்தன் என தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன் 2 புதிய படங்களில் நடிக்கிறார் லியோ ஹம்சவிர்தன் ‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார். லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் மே மாதம் 18ம் தேதி திருமண வரவேற்பு விமரிசையாக நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியோடும் வாழ்த்துகளோடும் இந்த காதல் திருமணம் நடந்தேறியது. நடிகர் லியோ ஹம்சவிர்தன் உடனான திருமணத்தை தொடர்ந்து நிமிஷா இனி நிமிஷா லியோ ஹம்சவிர்தன் என்று அழைக்கப்படுவார். இரண்டு புது படங்களில் நடிக்க லியோ ஹம்சவிர்தன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படங்களின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஹம்சவிர்தனின் முதல் மனைவி சாந்தி ஹம்சவிர்தன் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சோகத்தில் மூழ்கி இருந்த அவர் அதில் இருந்து மீண்டெழுந்து தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தற்போது துவங்கி உள்ளார். லியோ ஹம்சவிர்தன் மற்றும் அவரது மனைவி நிமிஷா லியோ ஹம்சவிர்தனுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. !

கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்2 புதிய படங்களில் நடிக்கிறார் லியோ ஹம்சவிர்தன்’புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார்.

லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.

நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் மே மாதம் 18ம் தேதி திருமண வரவேற்பு விமரிசையாக நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியோடும் வாழ்த்துகளோடும் இந்த காதல் திருமணம் நடந்தேறியது.

நடிகர் லியோ ஹம்சவிர்தன் உடனான திருமணத்தை தொடர்ந்து நிமிஷா இனி நிமிஷா லியோ ஹம்சவிர்தன் என்று அழைக்கப்படுவார்.

இரண்டு புது படங்களில் நடிக்க லியோ ஹம்சவிர்தன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படங்களின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஹம்சவிர்தனின் முதல் மனைவி சாந்தி ஹம்சவிர்தன் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சோகத்தில் மூழ்கி இருந்த அவர் அதில் இருந்து மீண்டெழுந்து தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தற்போது துவங்கி உள்ளார். லியோ ஹம்சவிர்தன் மற்றும் அவரது மனைவி நிமிஷா லியோ ஹம்சவிர்தனுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Related posts:

90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது ! பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்!!

தலைவன் தலைவி -- விமர்சனம்.!

“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”...‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்! தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிக...

இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா : நெகிழும் 'புஜ்ஜி @ அனுப்பட்டி 'திரைப்பட இயக்குநர் ராம் கந்தசாமி !

வீடுகளை வாடகைக்கு விடுவோர்,2 மாத வாடகையைத்தான் முன்பணமாக வாங்கணும்!

திரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி  வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்கான  டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய...

வங்கிகளின் மூலம் மக்களுக்கு ரூ.81,700 கோடி கடனுதவி ! நிர்மலா சீதாராமன் பேட்டி !! !!