பிளாஸ்டிக் இல்லாத பேஸ்ட்!

பல் துலக்க உதவும் பற்பசை மற்றும் பிரஷ் ஆகியவை இரண்டும் பிளாஸ்டிக் இல்லாமல் தயாரிக்க முடியுமா? கனடாவை சேர்ந்த சேன்ஜ் டூத்பேஸ்ட், அதை சாதித்திருக்கிறது. வீடுதோறும் இருக்கும் பற்பசை குழாய்களை அகற்றுவதுதான் அதன் நோக்கம்.

இதற்கென பல வடிவங்களில் பரிசோதித்து, கடைசியில் மாத்திரை வடிவில் பற்பசையை தயாரித்துள்ளது சேன்ஜ். இதில் ஒரு மாதிரியை எடுத்து வாயில் போட்டு, சற்றே தண்ணீரை வாயில் தேக்கிக் கடித்து, பிரஷ் செய்தால் உடனே பற்பசை போல நுரை வாயில் கொப்பளிக்கும்.
இந்த மாத்திரையில் செயற்கை வேதிப் பொருள் எதுவும் இல்லை என இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பல் துலக்கும் பிளாஸ்டிக் பிரஷ்ஷுக்கு மாற்றாக மூங்கில் நார்களையும் மூங்கில் கைப்பிடியும் கொண்ட இயற்கை பிரஷ்ஷையும் சேன்ஜ் உருவாக்கியிருக்கிறது.

டன் கணக்கில் குப்பையில் சேரும் பிளாஸ்டிக் பேஸ்ட் குழாய்களையும், பிஷ்களையும் இனி நிச்சயம் தவிர்க்க முடியும்.

Related posts:

கொசுவை விரட்டும் இயற்கை மருந்து!

உங்களுக்கு வாழ விருப்பம் இருந்தால் படியுங்கள். பிறர் வாழ விருப்பம் இருந்தால் பகிருங்கள்.

உடல் எடையை அதிகரிப்பது எப்படி ?

தொலைதூரத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவ சேவையை வழங்க 'பியாண்ட் ஃப்ரான்டியர்ஸ் டிரஸ்ட்' அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

சிறுநீர் கோளாறு # வர்மக்கலை மூலம் தீர்வு # ஆசான் பாமோ வெங்கடேசன்

செல்களுக்குள் நடக்கும் உயிர் போராட்டம்! உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ் ?

நவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பாதிப்பு ? விஞ்ஞானிகள் அதிர்ச்சி !

டெட்டாலை தோலில் தடவி எரிச்சல் ஏற்பட்டால், 'கெமிக்கல் லூக்கோடெர்மா' என்ற நோய் ஏற்படும்.?