பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் ‘கார்மேனி செல்வம்’!

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கார்மேனி செல்வம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக ‘கார் மேனி செல்வம்’ உருவாகிறது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, “அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக ‘கார் மேனி செல்வம்’ உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவை ததும்ப அமைத்துள்ளோம்,” என்றார்.

‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இசையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழ் திரையுலகில் முதல் முறையாக மியூசிக் ஏஸ் சர்வீஸ் (Music As Service) என்ற புதுமையான முறையில் இசையமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் திறம்பட செய்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாளுகின்றனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைக்கிறார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா.

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தை தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related posts:

சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் சார்பில் இதய பராமரிப்பு உச்சி மாநாடு !

நடிகர்கள் அசோக் செல்வன்- மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது!

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா!

’காட்டாளன்’ திரைப்பட விமர்சனம் !

'எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் வெளியிட்ட 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'மாயவலை' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் ட்ராக்!