CTMAவின் பிரமாண்டமான ஆவணிப்பூவரங் 2025 கொண்டாட்டத்திற்கு (அக்டோபர் 4 & 5) சென்னை தயாராகிறது!

தி சென்னை தமிழ்நாடு மலையாளி சங்கம் கூட்டமைப்பின் (CTMA) வருடாந்திர முதன்மை கலாச்சார விழாவான ஆவணிப்பூவரங் 2025, அக்டோபர் 4 (சனிக்கிழமை) மற்றும் அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. தமிழ் மற்றும் மலையாளிகளின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் இணைவாக அமையும் இந்த இரண்டு நாள் கொண்டாட்டத்தில் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றைக் காணலாம்.

முதல் நாளின் ஹைலைட் தருணங்கள்: சனிக்கிழமை, அக்டோபர் 4:

சென்னை, கேரள சமாஜத்தில் ஃப்ளோரல் டிசைன் போட்டி மற்றும் கவிஞர்கள் சந்திப்புடன் விழா தொடங்கும். அதிகாரப்பூர்வ தொடக்க விழா பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும். இதில் மதிப்புமிக்க பிரமுகர்கள் எம்.பி. புருஷோத்தமன், கோகுலம் கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

கலாச்சார நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்:

* டிரெடிஷனல் தக் ஆஃப் வார்,
* வில்லிவாக்கம் மலையாளி சமாஜத்தின் செண்ட மேளம் நிகழ்ச்சி,
* பிரவசியம் முயற்சியின் கீழ் குழு நடன நிகழ்ச்சிகள்,
* சிறப்பு விருந்தினர் நடிகர் ஆர்யா வருகை,
* பிரபல பாடகர்கள் சித்தார்த் மேனன் மற்றும் அஞ்சு ஜோசப் தலைமையில் மெட்ராஸ் மெயில் இசைக்குழுவுடன் இசை இரவு

இரண்டாம் நாளின் ஹைலைட் தருணங்கள்- ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 5:

பிரமாண்டமான பாரம்பரிய ஓணம் விருந்துடன் தொடங்கும் இரண்டாம் நாள் 3,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை மகிழ்விக்கும். கலாச்சார மற்றும் இசை கொண்டாட்டங்கள் இரண்டாம் நாளிலும் தொடரும்.

* வாத்யகலா ரத்னம் தேவராஜ் மாரர் தலைமையில் 101-இசைக்கருவி மேளம் வாசித்தல்,
* மாலை 5:00 மணிக்கு டாக்டர் சசி தரூர் எம்.பி. அவர்கள் தொடங்கி வைக்கும் கலாச்சார நிகழ்வு நடைபெறும்,
* மாலை 6:30 மணிக்கு வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் குழுவினரின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி

விருது மற்றும் கௌரவம்:

CTMA அதன் மதிப்புமிக்க ஆண்டு விருதுகளை அவரவர் துறைகளில் அளப்பரிய பங்களிப்பு கொடுத்த நபர்களுக்கு வழங்குகிறது.

* டாக்டர் சித்தன் மெமோரியல் டிராமா அவார்ட் – சிவாஜி குருவாயூர்,
* கே.வி. நாயர் சோஷியல் சர்வீஸ் அவார்ட் – எம்.கே. சோமன் மேத்யூ,
* டி. கோபாலன் மெண்ட்டல் ஹெல்த் அவார்ட் – டி. ஜோ குரியகோஸ்,
* மேலூர் தாமோதரன் பொயட்ரி அவார்ட் – ராதா தேவி,
* பாலகிருஷ்ணன் மங்காட் ஸ்டோரி அவார்ட் – அஜித் கல்லன்,
* சிறப்பு அங்கீகாரம் – ஏ.எம். கிருஷ்ணன், பிரபல தொழில்முனைவோர் மற்றும் CUSAT கல்வி கவுன்சில் உறுப்பினர்

கம்யூனிட்டி முன்னெடுப்பு:

வயநாடு நிலச்சரிவு துயரத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணான முபீனாவிடம் வீட்டுவசதி திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை CTMA ஒப்படைக்கும்.

கூடுதலாக, உலக தொழில்முனைவோர் தினத்தைக் கொண்டாடும் வகையில், CTMA இன் BISACON வணிக மாநாட்டில் திருவனந்தபுரத்தில் உள்ள கலாச்சார மையங்களுக்கு நன்கொடைகள் வழங்கப்படும். இது சமூக-கலாச்சார வளர்ச்சிக்கான சங்கத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நிகழ்வை P. நந்தகுமார் (பொது ஒருங்கிணைப்பாளர்) தலைமையிலான குழு ஏற்பாடு செய்துள்ளது. K.P. ரதீஷ், சஜி வர்கீஸ் மற்றும் ரஜினி மனோகர் ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

Related posts:

சொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது!

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் !

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் வழங்கும் கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் 'அநீதி' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நிர்மலாவுக்கு எண்டு கார்டு.. ராஜ்ய சபா வழியாக.. நிதி அமைச்சர் ஆகும் "இன்னொரு" தமிழர்?

என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன்.!

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம் !