02
Oct
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 19,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஆயுத பூஜையை முன்னிட்டு முதன்முறையாக 6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னையிலுள்ள தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. சென்னை மற்றும் பிற நகரங்களில் வேலை காரணமாக தங்கியிருக்கும் மக்கள், ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சிறப்பு பேருந்துகளை இந்த ஆண்டும் இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறினார். இதேபோல் பிற ஊர்களிலிருந்து…
