சோசியல் மீடியா

முகநூலை பின்னுக்குத் தள்ளிய டிக்டாக்!

முகநூலை பின்னுக்குத் தள்ளிய டிக்டாக்!

சர்வதேச அளவில் முகநூலை பின்னுக்குத் தள்ளி, 70 கோடி பேரால் பயன்படுத்தப்படும் செயலியாக டிக் டாக் முன்னேறியுள்ளது.சோஷியல் மீடியாவில் ஃபேஸ்புக் புரட்சி செய்தது என்றால், டிக்டாக் வேறுவிதமான புரட்சியை செய்தது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலி மூலம் பதிவுகள் வெளியிடுவது அதிகரித்துள்ளது. இதனால் பிரபல சோஷியல் மீடியா தளங்கள் கொஞ்சம் ஆடித்தான் போயின. டிக்டாக் செயலிக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனம் களமிறக்கிய லஸ்ஸோ என்ற செயலி இளைஞர்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலமாகவில்லை. இந்நிலையில் உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் செயலிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, அதிகபட்சமாக 85 கோடி பேர் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் 4 ஆவது காலாண்டான, அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் மட்டும் 39 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 70 கோடி பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் டிக் டாக் செயலி, இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. மெசஞ்சர்,…
Read More
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! புதிய அப்டேட்டுடன் 2020!

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! புதிய அப்டேட்டுடன் 2020!

2020 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் வாட்ஸ் ஆப் தனது பயனர்களுக்கு மூன்று புதிய அப்டேட்ஸ் கொண்டு வர உள்ளது.சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டிற்குள் 3 புதிய அப்டேட்டுகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த மூன்று அப்டேட்ஸ் என்னவெனில், வாட்ஸ் ஆப் டார்க் மோட், ஃபேஸ் அன்லாக், டெலிடெட் மெசெஜ். டார்க் மோட் வசதியை பெற என்பது வாட்ஸ் அப்பின் செட்டிங்க்ஸ் மெனுவில், டார்க் மோட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதை செலக்ட் செய்தால்,டார்க் மோட் வரும்.டெலிடெட் மெசெஜ் இது வாட்ஸ் ஆப் க்ரூப் சேட்டில் பயன்படும். ஒரு க்ரூப்பில் அட்மின் பதிவிடும் பதிவை, நேரம் குறிப்பிட்டு எப்போது வேண்டுமானாலும் டெலிட் செய்ய முடியும்.அதாவது, அனுப்பிய மெசேஜ், குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் தானாகவே மறையும் வகையில் இந்த அப்டேட் இருக்குமாம். ஃபேஸ் அன்லாக்…
Read More
வாடிக்கையாளர்களுக்கு டிவிட்டர் நிறுவனம் புதிய அட்வைஸ் ?

வாடிக்கையாளர்களுக்கு டிவிட்டர் நிறுவனம் புதிய அட்வைஸ் ?

டிவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் செலுத்தப்பட்டுவிட்டதாக டிவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த குறியீடுகள் உலகம் முழுக்க டிவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்துவோரின் விவரங்களை கசியவிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.தனது வாடிக்கையாளர்களை உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்யுமாறு டிவிட்டர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்த பிழை டிவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் உள்ள பிழை ஒருவரது அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் அக்கவுண்ட்டினை ஹேக்கர்கள் இயக்க வழி செய்யும் என டிவிட்டர் தெரிவித்துள்ளது. இந்த பிழை எவ்வாறு செயலியில் புகுத்தப்பட்டது என்றோ, இதன் மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது போன்று எவ்வித தகவலையும் வழங்கவில்லை.தற்போது இந்த பிழையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது. அந்தவகையில் பிழையில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் தங்களின் டிவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என டிவிட்டர் நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது.
Read More
வாட்ஸ்அப் செயலியின் புதிய அம்சங்கள் !

வாட்ஸ்அப் செயலியின் புதிய அம்சங்கள் !

வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பில் டார்க் மோட் மற்றும் சில புதிய அம்சங்களை சோதனை செய்யப்படுகின்றன. விரைவில் இந்த அம்சங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஐ.ஒ.எஸ். 2.20.10.23 அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு டார்க் மோட், லோ டேட்டா மோட் மற்றும் காண்டாக்ட்ஸ் இன்டகிரேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். ஐபோன் மொபைல் டேட்டாவில் இருக்கும் போது லோ டேட்டா மோட் மீடியா ஃபைல், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்டவை ஆட்டோ டவுன்லோடு ஆவதை தடுத்து நிறுத்தும். வைபை இல்லாத சமயங்களில் மொபைல் டேட்டா பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அமசம் ஐபோன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கிறது. இதனை இயக்க செட்டிங்ஸ் — செல்லுலார் — செல்லுலார் டேட்டா ஆப்ஷன் — லோ டேட்டா மோட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த அம்சம் ஐபோனில் இருந்து டாக்யூமென்ட் அல்லது ஏதேனும்…
Read More
முதல் முறையாக சென்னையின் கலை படைப்பாளிகளுக்காக பாப்-அப் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது யூ-டியூப்.. !

முதல் முறையாக சென்னையின் கலை படைப்பாளிகளுக்காக பாப்-அப் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது யூ-டியூப்.. !

தமிழ் உள்பட மாநில மொழிகளில் கலை அம்சமிக்க விடியோக்களை உருவாக்குவோருக்காக யூ-டியூப் தொடர்ந்து தனது ஆதரவுக்கரத்தை நீட்டி வருகிறது. இதற்காக முதலீடுகளையும் செய்கிறது. இதன்படி, சென்னையில் முதல் முறையாக யூ-டியூப் பாப்-அப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, யூ-டியூப் சேனல்கள் வைத்துள்ளவர்கள் யூ-டியூப்பின் தயாரிப்புக் கருவிகள், தயாரிப்பு உபகரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அசல் மற்றும் தரமான விடியோக்களை தயாரிக்கலாம். யூ-டியூப் சேனல்கள் வைத்துள்ள தொடக்க நிலை பயன்பாட்டாளர்கள் சுமார் 400 பேருக்கு வாய்ப்பைத் தரும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சென்னையில் யூ-டியூப்பின் களமானது மூன்று வகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மியூசிக் செட்-அப், உணவு வகைகளுக்கான ஸ்டூடியோ, லைஃப் ஸ்டைல் செட் என மூன்று வகையான செட்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மூன்று நாள் பயிலரங்கில் பல கலைஞர்கள் பங்கேற்று எப்படி விடியோ வடிவில் கதை சொல்வது, விடியோக்களின் கருக்களை தேர்வு செய்வது, தயாரிப்பு மற்றும் அதனை விளம்பரப்படுத்துவது போன்ற விஷயங்களை கேட்டறிந்தனர்.…
Read More
மிகச்சுலபமாக மொழிபெயர்க்க உதவும் கூகுள் கோ ஆப் ( Google Go )

மிகச்சுலபமாக மொழிபெயர்க்க உதவும் கூகுள் கோ ஆப் ( Google Go )

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது குறிப்பாக நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் கூகுள் கோ(Google Go ) என்கிற ஒரு ஆப்பை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது சிலர் இந்த செயலியை பயன்படுத்தி இருக்கலாம்.பின்பு ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட லைட் வெயிட் ஆப் ஆனது கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் நிறுவனம் புதிய ஏற்பாடு செய்துள்ளது இருந்தபோதிலும் ஒரு சில நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் சாதனங்களில் மட்டுமே அணுக கிடைத்த இந்த கூகுள் கோ ஆப், இப்போது உலகம் முழுவதும் உள்ள ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும்படி கூகுள் நிறுவனம் புதிய ஏற்பாடு செய்துள்ளது.கூகுள் நிறுவனம் சிறந்த இலகுரக வெறும் 7 எம்பி அளவிலான கூகுள் கோ ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக…
Read More
ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா ?

ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா ?

ஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ஏனென்றால் இதில் இருக்கும் வேலைகள் அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் பொருந்த கூடியதாக உள்ளது. மேலும், இவை இருந்த இடத்தில் இருந்தே பல ஆயிரங்களில் சம்பாதிக்க வைக்கிறது.நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய இணையத்தில் நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்பு இணையதளங்கள் உள்ளன. இவை வெவ்வேறு வகையான பணிகளை கொண்டுள்ளன. இங்கு ஒரு தனி நபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ பதிவு செய்து,தங்களுக்கேற்ற பணிகளை செய்து முடித்து, அதற்கான ஊதியத்தையும் பாதுகாப்பாக பெறக்கூடிய வகையில் தற்போது அனைத்து அம்சங்களுமே ஆன்லைனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பகுதி நேர வேலை இணையதளங்கள் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு மணி நேரமும் இந்திய மதிப்பில் ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான ஊதியம் வழங்கக் கூடிய பல நூற்றுக்கணக்கான வேலைகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்ற சில வகையான வேலைகளை மட்டும்…
Read More
வாட்ஸ் ஆப் ஹேக்கிங் பிரச்சனை விஸ்வரூபம் !சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு !!

வாட்ஸ் ஆப் ஹேக்கிங் பிரச்சனை விஸ்வரூபம் !சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு !!

ஹேக்கிங் சர்ச்சைக்கு எதிராக வாட்ஸ் ஆப், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.வாட்ஸ் ஆப் ஹேக்கிங் பிரச்சனை தற்போது உலகம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. இந்தியாவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக தற்போது புதிய விவரங்களும், தகவல்களும் வெளியாகி வருகிறது. இந்தியாவில் முக்கிய பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள், களப்பணியாளர்கள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களிடம் இருந்து முக்கியமான தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது.இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்று நிறுவனம்தான் இந்த ஹேக்கிங்கை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த நிறுவனம் இந்தியாவில் அரசியல்வாதிகளையும் குறி வைத்துள்ளது. அதோடு ராணுவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வேலை பார்க்கும் பெரிய அரசு அதிகாரிகளையும் குறி வைத்து உள்ளது. இது தொடர்பாக தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம், என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளது.இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இது…
Read More
தேவையில்லாத குழுக்களில் இணைவதை தவிர்க்க வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்ஸ்!

தேவையில்லாத குழுக்களில் இணைவதை தவிர்க்க வாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்ஸ்!

வாட்ஸ்அப் தளத்தில் க்ரூப் சாட் பயனாளர்களுக்கான அப்டேட் ஆக புதிய அப்டேட் வந்துள்ளது. தற்போதைய அம்சத்தை கூடுதலாக மெருகேற்றி தேவையில்லாத குழுக்களில் இணைவதைத் தவிர்க்க வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய ‘blacklist’ அம்சத்தையும் அப்டேட் செய்துள்ளது வாட்ஸ்அப். க்ரூப் சாட்-களுக்காக ‘My Contacts Except’ என்னும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள ஒரு குழுவில் இணைய பயனாளர்கள், ‘Everyone’, ‘My Contacts’ மற்றும் ‘Nobody’ ஆகிய அம்சங்களுள் ஏதேணும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் யார் வேண்டுமானாலும் உங்களை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைக்கலாம் என்றால் Everyone அம்சம், உங்களது கான்டாக்ட்ஸ் பட்டியலில் இருப்போர் மட்டும் என்றால் My Contacts எனத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 'Nobody’ என்னும் அம்சத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு க்ரூப்-ல் இணைய invite வரும். ஆனால், மூன்று நாட்களில் அந்த அழைப்பு காலாவதி ஆகிவிடும். புதிய அப்டேட்டில் 'Nobody’ என்னும் அம்சம் ‘My Contacts Expect’ என்று இணைக்கப்பட்டுள்ளது.…
Read More
‘கூகுள்’ தான் உலகின் நெ.1 தேடுபொறி.!  அடுத்த இடத்தை  பிடித்திருப்பது, ‘ஜிப்பி’ !!

‘கூகுள்’ தான் உலகின் நெ.1 தேடுபொறி.! அடுத்த இடத்தை பிடித்திருப்பது, ‘ஜிப்பி’ !!

'கூகுள்' தான் உலகின் நெ.1 தேடுபொறி. அதற்கு அடுத்த இடத்தை இப்போது பிடித்திருப்பது, 'ஜிப்பி' (giphy.com).தன் நண்பர்களை குஷிப்படுத்துவதற்காக இணையத்தில், 'ஜிப்' கோப்புகளாக கிடைக்கும் சிலவினாடி வீடியோ துணுக்குகளை தேடும் மென்பொருளை உருவாக்கினார் அலெக்ஸ் சுங்.பிறகு, 2012ல் அதை முழுநேர தேடுபொறி தளமாக தன் நண்பர் ஒருவரை இணை நிறுவனராக ஆக்கி துவக்கினார் அலெக்ஸ். இணைய உலகில் பல மொழிகள், கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் புழங்குகின்றனர். அவர்கள் தங்கள் அன்பு, கருணை, கோபம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த, ஜிப் படத்துணுக்குகளை பயன்படுத்த ஆரம்பித்திருந்த நேரம் அது. அந்த படத்துணுக்குகளை தலைப்பு வாரியாக, உணர்வு வாரியாக பிரித்துத் தரும் பணியை ஜிப் சரியாகச் செய்தது.இந்த தேடு பொறியை, 'டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர்' போன்ற சேவைகள் ஆதரிக்க ஆரம்பித்தன. நீங்களும் இந்த தளங்களில் ஜிப் படத்துணுக்குகளை தேடியிருந்தால், அதைத் தேடித் தந்தது ஜிப்பி மென்பொருளாகத்தான் இருக்கும்.இப்படி மறைமுகமாகவும், நேரடியாகவும் பலர் ஜிப்பியின் சேவையை பயன்படுத்த…
Read More