22
Jan
lவாட்ஸ்அப் தளமானது பேஸ்புக் உடன் “தவிர்க்க முடியாத வண்ணம் இணைக்கப்படப் போகிறது”, இந்த மாற்றங்கள் வாட்ஸ்அப்பின் பிஸ்னஸ் பயனர்களுக்கு மட்டுமே என்று வாட்ஸ்அப் “தெளிவுபடுத்தி வருகிறது” என்றாலும் கூட, உண்மையை உரக்க சொல்லவேண்டுமென்றால் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைகள் எதுவுமே மிகவும் உறுதியானதாக அல்லது பாதுகாப்பானதாகத் தெரியவில்லை.ஆம், வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவஸி பாலிசிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இழக்க நேரிடும். எனவே தான் பெரும்பாலான பயனர்கள், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று ஆப்களை பற்றி கூகுள் செய்து வருகின்றன. ஒருவேளை நீங்க; சிக்னல் ஆப்பிற்கு மாற விரும்பினால், அதே சமயம் உங்கள் வாட்ஸ்ஆப் க்ரூப் சாட்களை நீங்கள் இழக்க விரும்பவில்லை என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்அதாவது வாட்ஸ்அப் க்ரூப் சாட்ளை சிக்னலுக்கு நகர்த்துவது எப்படி என்கிற எளிய வழிமுறைகளை பற்றியே…