• YZF-R2 இந்தியாவில் Rs. 2,30,500 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது; 3 வேரியண்ட்டுகள் மற்றும் 5 கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.
• குறைந்த எடையில் பிரிவிலேயே சிறந்த செயல்திறனை வழங்குகிறது
• இப்பிரிவிலேயே முதன்முறையாக இருவழி விரைவு கியர் மாற்றும் வசதியைக் கொண்டுள்ளது
India Yamaha Motor (IYM) Pvt. Ltd. இன்று புத்தம் புதிய, உலகிலேயே முதன்முறையாக YZF-R2 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது, இது நாட்டில் நிறுவனத்தின் புகழ்பெற்ற R-series போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்துகிறது. Rs. 2,30,500 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆரம்ப விலையில் கிடைக்கும் YZF-R2, Yamaha-வின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் லைன்அப்பை விரிவாக்கவும், இந்திய ரைடர்களின் வளர்ந்து வரும் ஆசைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை வழங்கவும் உள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.
புத்தம் புதிய YZF-R2, மிகுந்த போட்டி நிறைந்த 200cc பிரிவில் Yamaha-வின் முதல் அறிமுகமாகும். இது தூய்மையான சூப்பர் ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ், நவீன தொழில்நுட்பம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மையை விரும்பும் புதிய தலைமுறை ஓட்டுநர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டு, ஜப்பானில் உருவாக்கப்பட்டு இன்ஜினியரிங் செய்யப்பட்ட புதிய இன்ஜின் மூலம் இயங்கும் இது, இந்திய குழுவினருடனான சீரான கூட்டு முயற்சியால் உருவானது. YZF-R2 சிறப்பான செயல்திறன், நம்பிக்கையளிக்கும் கையாளுதல் மற்றும் Yamaha-வின் ரேஸ் பாரம்பரிய பொறியியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
இந்தியாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தை தொடர்ந்து வளர்ந்து வருகிறது, இது உயர்ந்த ஆசைகள், மாறிவரும் லைஃப்ஸ்டைல் மற்றும் பிரீமியம் மொபிலிட்டி தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் விருப்பத்தால் உந்தப்படுகிறது. 200cc பிரிவு வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது, இது அதிக அளவிலான பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஓனர்ஷிப் எக்ஸ்பீரியன்ஸுக்கு மாற விரும்பும் ரைடர்களை ஈர்க்கிறது. இந்த மாற்றம் Yamaha தனது ஒட்டுமொத்த மோட்டார்சைக்கிள் பிசினஸை வலுப்படுத்தவும், நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தைப் பிரிவுகளில் ஒன்றில் தனது இருப்பை மேலும் விரிவாக்கவும் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. இந்த வளர்ந்து வரும் பிரிவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட YZF-R2, பவர், அஜிலிட்டி மற்றும் அன்றாட ரைடிங் வசதிக்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்துகிறது, இது டிராக், ஹைவேகள் மற்றும் தினசரி பயணங்களுக்கும் சமமான திறன் கொண்டதாக அமைகிறது.
புத்தம் புதிய YZF-R2 ஆனது ஐந்து தனித்துவமான கலர் ஆப்ஷன்களில் மூன்று வேரியண்ட்களில் வழங்கப்படும், இது ரைடர்கள் தங்களின் ரைடிங் ஸ்டைல் மற்றும் ஆளுமைக்கு மிகவும் பொருத்தமான மோட்டார்சைக்கிளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. YZF-R2 பேஸ் வேரியண்ட் Metallic Black & Dark Bluish Gray நிறத்தில் கிடைக்கும், இதில் கிளீன் மற்றும் அட்டகாசமான தோற்றத்திற்காக ஆல்-பிளாக் முன் மற்றும் பின் வீல்கள் மற்றும் மேட்-ஃபினிஷ் சீட் ஆகியவை உள்ளன. அடுத்ததாக, YZF-R2-ன் இரண்டாவது வேரியண்ட் 3rd generation bi-directional Quick Shifter அம்சத்தைக் கொண்டுள்ளது மற்றும் Matte White Pearl & Racing Blue கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இது பாடி கலர்டு அலாய் வீல்கள், மாடல்-ஸ்பெசிஃபிக் கிராபிக்ஸ் மற்றும் பிரீமியம் மெட்டீரியல் ஃபினிஷ்களைக் கொண்டுள்ளது, இது இதன் ஸ்போர்ட்டி தன்மையை மேலும் உயர்த்திக் காட்டுகிறது.
இந்தத் தொடரின் உயர்நிலை மாடலான YZF-R2M, பிரத்யேக Metallic Gray நிறத்தில் கிடைக்கிறது மற்றும் அல்டிமேட் சூப்பர் ஸ்போர்ட் எக்ஸ்பீரியன்ஸை விரும்பும் ரைடர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. Quick Shifter தவிர, இது ஒரு பிரீமியம் 3D எம்போஸ்டு எம்ப்ளம், ஃபோ சுவேட் (faux suede) ஃபினிஷ் செய்யப்பட்ட சீட், சில்வர்-ஃபினிஷ்டு ஸ்விங்ஆர்ம் மற்றும் Yamaha-வின் பிளாக்ஷிப் R1-ன் ஹை-கிளாஸ் ஃபினிஷை ஒத்து இருக்கும் ஷாட்-பிளாஸ்டட் மஃப்ளர் எண்ட் கேப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. M வேரியண்ட்டில் அட்ஜஸ்டபிள் பிரண்ட் ஃபோர்க், ரியர் ஷாக்கர்ஸ், கிளட்ச் லீவர் மற்றும் பிரேக் லீவர் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன, இது சிறந்த பெர்சனலைசேஷன் மற்றும் மேம்பட்ட ரைடிங் டைனமிக்ஸை வழங்குகிறது.
அனைத்து வேரியண்ட்களிலும், YZF-R2 ஆனது 17-இன்ச் வீல்கள், Traction Control System (TCS), Assist & Slipper Clutch, தேர்வு செய்யக்கூடிய ரைடிங் மோட்களுடன் கூடிய Yamaha Ride Control (YRC), 37 mm அப்சைடு-டவுன் (USD) பிரண்ட் ஃபோர்க்ஸ் மற்றும் டூயல்-சேனல் ABS ஆகியவற்றை ஸ்டாண்டர்டாகக் கொண்டு, பெர்ஃபார்மன்ஸ் மற்றும் சேஃப்டி டெக்னாலஜிகளின் முழுமையான தொகுப்புடன் வருகிறது.
பந்தயத்தால் ஈர்க்கப்பட்ட ஸ்டைலிங்
Yamaha-வின் லேட்டஸ்ட் குளோபல் R-series மோட்டார்சைக்கிள்களில் இருந்து உத்வேகம் பெற்று, புத்தம் புதிய YZF-R2 ஆனது தனித்துவமான சூப்பர் ஸ்போர்ட் ஸ்டைலிங்குடன் கூர்மையான, ஏரோடைனமிக் டிசைனைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மேற்பரப்பும் வேகம், அஜிலிட்டி மற்றும் துல்லியத்தை வெளிப்படுத்தும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது, இது மோட்டார்சைக்கிள் நின்று கொண்டிருக்கும் போதும் ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.
முன்பக்க ஃபேசியா காம்பேக்ட் பயி-ஃபங்க்ஷனல் LED ஹெட்லைட் மற்றும் அதன் இருபுறமும் உள்ள டூயல் LED பொசிஷன் லைட்களால் வரையறுக்கப்படுகிறது, இது ஒரு தனித்துவமான முகத்தை உருவாக்கி YZF-R2-வை Yamaha-வின் புகழ்பெற்ற R-series பரம்பரையுடன் உடனடியாக இணைக்கிறது. R9-ன் ஏரோடைனமிக்ஸால் உத்வேகம் பெறப்பட்டு, செதுக்கப்பட்ட பிரண்ட் ஃபேரிங் மற்றும் இறுக்கமாக அமைக்கப்பட்ட பாடிவொர்க் ஆகியவை அதிக வேகத்தில் ஸ்டெபிலிட்டியை அதிகரிக்க ஏர்ஃப்ளோவை திறம்பட நிர்வகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில், YZF-R1-ல் இருந்து பெறப்பட்ட தனித்துவமான பிளாக்-ஸ்டைல் LED டெயில்லைட் மற்றும் MotoGP-ன் தாக்கம் கொண்ட ஸ்விங்ஆர்ம் ஆகியவை மோட்டார்சைக்கிளின் பிரீமியம் ஸ்போர்ட்டி தன்மையையும் மறுக்க முடியாத Yamaha அடையாளத்தையும் வலுப்படுத்துகின்றன.
சுறுசுறுப்புக்காக வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய தளம்
முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட YZF-R2, இலகுவான சுறுசுறுப்பு, நம்பிக்கையளிக்கும் கையாளுமை மற்றும் ஒரு சிறந்த சவாரி அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்-இழுவிசை எஃகு குழாய் டைமண்ட் பிரேம் உள்ளது. இது விறைப்புத்தன்மைக்கும் குறைந்த எடைக்கும் இடையே ஒரு சரியான சமநிலையை ஏற்படுத்துகிறது. மேலும் இதன் மொத்த எடை (kerb weight) வெறும் 149 கிலோ மட்டுமே என்பதால், இது தன் பிரிவிலேயே மிகக் குறைந்த எடை கொண்டதாக அமைகிறது.
Yamaha-வின் புகழ்பெற்ற YZF-R6-ன் சேசிஸ் அளவுகளால் உத்வேகம் பெறப்பட்டு, புதிய பிரேம் ஜியோமெட்ரி பல்வேறு ரைடர் திறன்கள் மற்றும் ரைடிங் நிலைகளில் இயற்கையான மற்றும் இயல்பான ஹேண்ட்லிங்கை வழங்கும் வகையில் ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது. சேசிஸ் கூடுதல் மவுண்டிங் பாயிண்டுடன் கூடிய ஃபோர்-பாயிண்ட் இன்ஜின் மவுண்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது, இது பிரேம் மற்றும் இன்ஜினுக்கு இடையேயான வளைவைக் குறைக்க உதவுகிறது, அதே நேரத்தில் ஒட்டுமொத்த சேசிஸ் ஸ்டெபிலிட்டி, ஃபீட்பேக் மற்றும் கார்னரிங் பெர்ஃபார்மன்ஸை மேம்படுத்துகிறது.
செயல்திறனுக்காக உருவாக்கப்பட்ட புத்தம் புதிய 204cc இன்ஜின்
புத்தம் புதிய YZF-R2 பைக்கிற்கு ஆற்றலளிப்பது புதிதாக உருவாக்கப்பட்ட 204cc, லிக்விட்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், DOHC (Double Overhead Camshaft), சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வ், ஃபியூயல்-இன்ஜெக்டட் இன்ஜின் ஆகும். இது சிறந்த செயல்திறன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கான ஓட்டுதல் ஆகியவற்றின் சிறப்பான கலவையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பவர்டிரெயின், அதன் பிரிவிலேயே மிகச் சிறந்த 26.5 PS பவர் மற்றும் 19.1 Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்து, வலுவான அக்சலரேஷன், ஸ்மூத்தான பவர் டெலிவரி மற்றும் விறுவிறுப்பான ஹை-ரெவ்விங் தன்மையை வழங்குகிறது. இதன் மையப்பகுதியில் ஃபிங்கர் ஃபாலோயர் ராக்கர் ஆர்ம் மற்றும் Yamaha-வின் முதன்மை மாடலான R1-ல் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பமான டைமண்ட்-லைக் கார்பன் (DLC – Diamond-Like Carbon) கோட்டிங் கொண்ட வால்வ்டிரெயின் உள்ளது. இந்த புதுமையான அமைப்பு உராய்வு மற்றும் ரெசிப்ரோகேட்டிங் எடையைக் குறைத்து, குறைந்த வால்வ்டிரெயின் எடை, மேம்படுத்தப்பட்ட திறனுறுதி, அதிக நீடித்துழைக்கும் தன்மை மற்றும் Yamaha-வின் ஸ்போர்ட்டிங் டிஎன்ஏ-வை வெளிப்படுத்தும் துரிதமான, ஃப்ரீ-ரெவ்விங் பெர்ஃபார்மன்ஸுக்குப் பங்களிக்கிறது.
இலகுரக சேசிஸ் மற்றும் நம்பிக்கையூட்டும் சஸ்பென்ஷன்
அஜிலிட்டி மற்றும் கன்ட்ரோலுக்காக இன்ஜினியரிங் செய்யப்பட்ட YZF-R2, வெறும் 14 kg மட்டுமே எடையுள்ள லைட்வெயிட் ஸ்டீல் பிரேமினைக் கொண்டுள்ளது. ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பிரேம் அமைப்பு ஒட்டுமொத்த எடையைக் குறைக்கும் அதே வேளையில் ரிஜிடிட்டியை அதிகரிக்கிறது, இது மேம்படுத்தப்பட்ட ஹேண்ட்லிங், கூர்மையான கார்னரிங் மற்றும் அதிக ரைடர் நம்பிக்கைக்கு பங்களிக்கிறது.
சேசிஸை பூர்த்தி செய்யும் விதமாக 37 mm அப்சைடு-டவுன் (USD) பிரண்ட் ஃபோர்க்ஸ் மற்றும் ரியர் மோனோஷாக் அடங்கிய பிரீமியம் சஸ்பென்ஷன் செட்டப் உள்ளது, இது பல்வேறு ரைடிங் நிலைகளில் சிறந்த ரோட்-ஹோல்டிங் பெர்ஃபார்மன்ஸை வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. மேடு பள்ளங்கள் மற்றும் சீரற்ற சாலைப் பரப்புகளை திறம்பட உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஷன், சேசிஸ் ஸ்டெபிலிட்டி, துல்லியமான ஹேண்ட்லிங் மற்றும் ரைட் கம்ஃபோர்ட் ஆகியவற்றின் சரியான சமநிலையை வழங்குகிறது, நகரச் சாலைகள் மற்றும் வார இறுதி ரைடுகள் இரண்டிலும் நம்பிக்கையான மற்றும் விறுவிறுப்பான ரைடிங் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்கிறது.
ஸ்மார்ட் இணைப்பு மற்றும் சவாரி முறைகள்
YZF-R2 வசதி, கனெக்டிவிட்டி மற்றும் ரைடர் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல நவீன டெக்னாலஜிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு தெளிவான 5-இன்ச் ஃபுல்-கலர் TFT டிஸ்ப்ளே முக்கிய ரைட் மற்றும் நேவிகேஷன் தகவல்களுக்கு தெளிவான அணுகலை வழங்குகிறது, அதே நேரத்தில் ஸ்மார்ட் கீ சிஸ்டம் (M வேரியண்ட்டில் கிடைக்கிறது) கூடுதல் வசதிக்காக தடையற்ற கீலெஸ் செயல்பாட்டை வழங்குகிறது. Yamaha Ride Control (YRC) மூலம் இந்த மோட்டார்சைக்கிள் மூன்று ரைடிங் மோட்களையும் கொண்டுள்ளது. YRC ரைடர்களுக்கு Street, Sport மற்றும் Rain மோட்களில் இருந்து தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறது, இது பல்வேறு சாலை நிலைமைகள் மற்றும் ரைடிங் விருப்பங்களுக்கு ஏற்ப மோட்டார்சைக்கிளின் பெர்ஃபார்மன்ஸை மாற்றியமைக்க ரைடர்களை அனுமதிக்கிறது.
இந்த அறிமுகம் குறித்து பேசிய Yamaha Motor India குழுமத்தின் தலைவர் திரு. ஹஜிமே ஆவோடா அவர்கள்: “YZF-R2-வின் அறிமுகமானது Yamaha-வின் நீண்டகால வளர்ச்சி உத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். YZF-R2 என்பது ஒரு புதிய பிரிவில் நுழைவது மட்டுமல்ல; இது Yamaha R-சீரிஸின் உணர்விற்கு கட்டுப்பட்ட ரைடர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மோட்டார்சைக்கிள். உண்மையான R-சீரிஸ் டிஎன்ஏ-வை குறைந்த எடை செயல்திறன் மற்றும் மிகச்சிறந்த ஃபியூயல் எஃபிஷியன்சியுடன் இணைத்து, இது எங்கள் சூப்பர்ஸ்போர்ட் உலகத்திற்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய கதவைத் திறக்கிறது. உலகளாவிய R-சீரிஸ் முதன்மை மோட்டார்சைக்கிள்களிலிருந்து ஈர்க்கப்பட்டு, முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ள YZF-R2, இந்தியாவின் இன்ஜினியரிங் நிபுணத்துவம் மற்றும் Yamaha-வின் உலகளாவிய தயாரிப்பு உத்தியில் அதன் வளர்ந்து வரும் பங்கு ஆகியவற்றின் மீது எங்களுக்குள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.
“இந்தியாவில் உள்ள எங்கள் R-series வாடிக்கையாளர்களின் தளராத நம்பிக்கை மற்றும் ஆர்வத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், இது R-series-ஐ நாட்டில் Yamaha-வின் மிகவும் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் குடும்பங்களில் ஒன்றாக மாற்ற உதவியுள்ளது. இன்று, இந்தியச் சாலைகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான R-series மோட்டார்சைக்கிள்கள் இயங்கி வரும் நிலையில், இந்த நீடித்த உறவு புதுமை மற்றும் பெர்ஃபார்மன்ஸின் எல்லைகளைத் தள்ள எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. YZF-R2 இந்த பாரம்பரியத்தை மேலும் வளர்க்கும், அதன் பிரிவில் ஒரு புதிய பெஞ்ச்மார்க்கை அமைக்கும் மற்றும் அடுத்த தலைமுறை Yamaha ரைடர்களை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”
புத்தம் புதிய YZF-R2 செப்டம்பர் 2026 பாதியில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து Blue Square (BSQ) டீலர்ஷிப்களிலும் கிடைக்கும்.
