பிரேக் பாஸ்ட்- திரை விமர்சனம்.!

இன்ஸ்டா கால ஒரு இளைஞனும் இளைஞியும் இன்சிடெண்டாக காதல் கொண்டு திருமணமும் செய்துகொள்கின்றனர். சொல்லி வைத்தது போல விரைவிலே டிவோர்ஸுக்கு வந்து நிற்கிறார்கள். நீதிமன்றம் அந்த ஜோடியை கவுன்சிலிங்கிற்கு அனுப்புகிறது. கவுன்சிலிங் கொடுக்கும் கஸ்தூரி அவர்களுக்கு ஒரு கதையைச் சொல்கிறார். அந்தக் கதைதான் ஹீரோ ராணவ், ஹீரோயின் ரோஸ்மின் இருவருடைய காதல் மற்றும் திருமணக்கதை! இவர்கள் இருவரின் வாழ்வும் காதலில் துவங்கி கல்யாணத்தில் தொடர்ந்து எப்படியான முடிவை எட்டியது என்பதே படத்தின் மீதி திரைக்கதை

பெரிய தொழிலதிபரின் மகள் ரோஸ்மின். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த ராணவ்-க்கு தனது நிறுவனத்திலேயே வேலை ஏற்பாடு செய்து  தருகிறார்….கதையின் நாயகனாக ராணவ் ஓரளவு தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் வீரியமான நடிப்பை வழங்கியிருக்கலாம். நாயகி ரோஸ்மின் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் தேர்ந்த நடிகையாக தென்படுகிறார். சம்பத் சில காட்சிகளில் ஓவர் நடிப்பை தந்துள்ளார். ரவிமரியா கொடுத்த வேலையைச் சரியாகச்செய்துள்ளார். கஸ்தூரி கேர்கடர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அர்ச்சனா, க்ரித்திக் மோஹன், ரங்கநாதன் ஆகியோர் ஒகே

படத்தில் இல்லாத உணர்வெழுச்சியை தன் இசையில் தந்துள்ளார் ஜிவி பிரகாஷ்! பாடல்களும் நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. பன்னீர் செல்வம் தனது ஒளிப்பதிவு பணியை கவித்துமாக செய்துள்ளார். ஒரு ஹனிமூன் சாங் ஆகத்தரமாக படமாக்கப்பட்டுள்ளது

பிரிவு என்பது சுலபம். உறவை நீட்டித்து வாழ்வது தான் கடினம்! ஆனால் அந்தக் கடினத்தை கடப்பது தான் பேரானந்தம் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா! கதையாக இதை அவர் சொல்லியிருந்தாலும், திரைக்கதை திக்கு தெரியாமல் எங்கெங்கோ செல்கிறது..அவற்றை இன்னும் சிறப்புற அமைத்திருக்கலாம்! கேரக்டர்களுக்கான ரைட்டிங்கிலும் அதீத கவனம் செலுத்தியிருக்கலாம்

Related posts:

நடிகர்கள் அசோக் செல்வன்- மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது!

‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங் !

நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து “கிங்டம்” திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்!

‘மார்கோ’வின் வெற்றிக்குப் பின், Cubes Entertainment புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !!

”‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது” - யுவன் ஷங்கர் ராஜா!

சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்!

சிம்புதேவனின் புதிய பான்-இந்தியா படம் 'போட்' 5 மொழிகளில் வெளியாகிறது !