அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகரான வெற்றி இன்று தன் பிறந்தநாளை, கோவிலில் எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடியுள்ளார் .

தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்து,  நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால் அறிமுகமாகி எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, அந்த உயரத்தை அடைந்தவர் நடிகர் வெற்றி. அவர் படங்களின் கதை களங்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு, ரசிகர்களின் ரசிப்பு திறனை கூட்டுவதாக அமைந்துள்ளது. தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக் கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி. அவருக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் வெற்றி, தன் படங்கள் போலவே தன் பிறந்தநாளையும் தனித்துவமாக கொண்டாடியுள்ளார். தான் வசிக்கும் சின்மயா நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர், அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து அங்கு எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி, அவர்களுடன் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.ரசிகர்கள் நடிகர் வெற்றிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவரின் இனிமையான குணத்தைப் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான களங்களில் புதுமையான படங்களைத் தந்து அசத்தி வரும் நடிகர் வெற்றி தற்போது, இரவு, ஆலன், ஈரப்பதம் காற்று மழை முதலான படங்களில் நடித்து வருகிறார்.

Related posts:

Samsung TV Plus Announces the Launch of Four New FAST Channels From Viacom18 Exclusively on Samsung Smart TVs !

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான ஐமேக்ஸ் முன்பதிவுகள் நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது!

சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம்!

சென்னையில் 3 நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை !

'புஜ்ஜி @ அனுப்பட்டி ' -- விமர்சனம் !

கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு

பிரபல மருத்துவர் டாக்டர் யு.பி. சீனிவாசன் உருவாக்கியுள்ள 'ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு !