‘குட் நைட்’ தயாரிப்பாளர்களின் அடுத்த பட அறிவிப்பு !

பெரியஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட்.அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது.
இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கியவேடத்தில் நடிக்கிறார்.

இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் என வலிமையான கூட்டணி அமைந்துள்ளது.தயாரிப்பு – நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன்தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன குறித்த விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் பிரபுராம்வியாஸ்.சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இப்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.

Related posts:

உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், ஆகியோரின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமாண்...

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.!

'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது!

*சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்...

தொழில் மற்றும் கல்வி இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ‘Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வை நடத்திய ஜேப்பியார் பல்கலைக்கழகம்!

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

”காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘மையல்’ பேசுகிறது” இயக்குநர்  APG  ஏழுமலை!