பாஜக வேண்டவே வேண்டாம். எடப்பாடி பிடிவாதம் ? சீனியர்கள்..அமைச்சர்கள் சமாதானம்? உள்துறை அமைச்சர் அமித் ஷாவப் பத்தி எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அளித்த பேட்டி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரபபா பேசப்பட்டுகிட்டு வருது.பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அதிமுக – பாஜக உறவு நீடிக்குமாங்கிற சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சி?. கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தார். இவரை ஓ பன்னீர்செல்வம் போய்ப் பாத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பாக்கலை. அமித் ஷாவை ஏன் எடப்பாடி சந்திக்கலை? எதுவும் மோதலா? கருத்து வேறுபாடாங்கிற கேள்விகள் வர ஆரம்பிச்சுது. இதப் பத்தி கேள்விகேட்டதுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மேலும் விவாதங்களை தீவிரமாக்கிடுச்சி.
ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி.. இவங்க மூணு பேரையும் சேத்துக்குங்கன்னு சொன்ன அமித் ஷா.. கொந்தளிச்ச எடப்பாடி! பிரச்சனை தொடங்கியது இங்குதான்? அமித் ஷாவப் பத்தி கேட்ட கேள்விக்கு எடப்பாடி என்ன சொன்னாருன்னா அதிமுக பாஜகங்கிறது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜகங்கிறது தேசிய கட்சி. அதிமுகங்கிறது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைன்னு எடப்பாடி பழனிசாமி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்கிற மாதிரி பேசிட்டாரு. அவரின் இந்த பேச்சு காரணமாக எங்கே பாஜக – அதிமுக கூட்டணி உடையப்போகுதோங்கிற கேள்வி வரத்தொடங்கிடுச்சி.
இது தொடர்பாக எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரத்திடம் விசாரிச்சா அவங்க என்ன சொல்றாங்கன்னா அதிமுகவிற்குள் என்ன நடந்துகிட்டு இருக்குங்கிறதைப் புட்டு புட்டு வைக்கிறாங்க.. அதன்படி, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்ங்கிற அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. அதாவது பாஜகவை உதறி தள்ளுவதற்கு எடப்பாடி ரெடியாகிட்டாரு. ஆனால், எடப்பாடிக்கு ஆகப்பெரிய பலமாகவும், அவர் எடுக்கும் அனைத்து அரசியல் முடிவுகளுக்கும் ஒத்துழைப்பு தந்துவருபவர்களுமான முன்னாள் அமைச்சர்கள் 2 பேர், பாஜக கூட்டணியை உதறணும்ங்கிற எடப்பாடியின் திட்டத்துக்கு எதிராக இருக்கிறாங்களாம். இதப்பத்தி அந்த இரண்டு பேரும் எடப்பாடியிடம், ”பாஜகவுடன் கூட்டணிங்கிறது வெறும் வெற்றி தோல்வியை மட்டுமே கணக்கிடுவது கிடையாது. அதையும் தாண்டி நிறைய விசயங்கள் இருக்குது. மீண்டும் மோடிதான் பிரதமராவாருன்னு பல தரப்பிலும் சொல்லப்படுது.அது தான் உண்மையும் கூட. இந்த நெலைமைல மத்திய அரசு நமக்கான அரசாக இருப்பதுதானே சரியாக இருக்கும்? பாஜக ஆட்சி தான் மீண்டும் வரப்போகுதுங்கிற சூழலில் பாஜகவை பகைச்சுக்கிறதோ, கூட்டணியை உதர்றதோ ஆரோக்கியமானதாக இருக்காதுன்னு சொல்லியிருக்காங்க. அதற்கு எடப்பாடி, ”பாஜகவுடன் கூட்டணி இல்லைன்னா ரெய்டு வந்துடும்னு பயபடுறீங்களா? கூட்டணியில் தான் இதுவரை இருந்தோம், நமக்கு எதிராக ரெய்டு நடத்தாமலா இருந்தாங்க? அரசியலை அரசியலாக எதிர்கொள்ளணும். திமுக பாஜக கூட்டணியில் இல்லாம தைரியமாத்தானே இருக்குது. அவங்க மேலயும் வழக்கே இல்லையா? அவங்களும் இருக்காங்களே பிரச்சனை இல்லாம. அதிமுக ஒற்றுமையுடன் இருக்கணும்னு பாஜக சொல்றது நல்ல எண்ணத்தில் இல்லை. அதிமுக பிளவுப்படாமல் இருந்தாத் தான் அதிமுகவோட வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய முடியும்னு நம்புறாங்க., நம்மோட வாக்குகள் இல்லாமல் பாஜகவால் ஒரு எம்.பி.சீட்டில் கூட ஜெயிக்க முடியாதுங்கிறது மோடிக்கும் அமித்சாவுக்கும் தெரியும். அதனாலத்தான் நல்லப்பிள்ளை மாதிரி நம்மை எல்லாம் ஒண்ணாக்க முயற்சிக்குது பாஜக. பாஜகவோட இந்த முகமூடியை நீங்கள் தெரிஞ்சிக்கணும்னு இரண்டு மாஜி மந்திரிகளோட கருத்துக்களை மறுத்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதாவது எடப்பாடி பழனிசாமி கிட்டதட்ட அதிரடி முடிவை எடுக்க தயாராகிட்டாரு. அவரை தடுக்க கூடிய பலம் வாய்ந்த 2 மாஜிக்கள் மூலமே அவரை தடுக்க முடியலைங்கிறாங்க, அதிமுக வட்டாரத்தினர்.மூத்த அமைச்சர்கள் ஊழல் வழக்குகளுக்கு பயந்து பாஜக கூட்டணி வேணும்னு சொன்னாலும் தொண்டர்கள் பாஜக கூட்டணி வேண்டவே வேண்டாம்னு தான் சொல்றாங்க.ஓபிஎஸ் இபிஎஸ் இணையவே கூடாதுன்னு தென்மாவட்ட முக்குலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தான் முட்டுக்கட்டை போடுறாங்களாம்
எடப்பாடி அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஒரு சிலர், தேர்தலை மனசில் வச்சுகிட்டு, ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைய விரும்புறதா சொல்லப்படுது. ஆனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேர் மட்டும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணையவே கூடாதுன்னு அவங்கவங்க இஷ்ட தெய்வங்களை வேண்டிகிட்டு வர்றாங்களாம். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வந்தால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமும், முக்கிய பதவிகளும் பறிக்கப்பட்டு விடுமேங்கிறதுதான் அவங்களோட அச்சத்திற்குக் காரணமாம். பிரதமர் மோடிகூட சமீபத்தில் வந்திருந்தப்போ ,கூட ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே இணக்கம் ஏற்பட்டுடக்கூடாதுன்னு அவங்க மூணு பேரும் உச்சகட்ட பரபரப்பில் இருந்தாங்களாம்.பேருக்குதான் எடப்பாடி பொதுச் செயலாளர்.. ஆனால்.. டெல்லியில் சட்டரீதியாக வைக்கப்பட்ட செக்காத்தான் பார்க்கப்படுவது. பாஜக தலைமை, ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து செயல்படணும், டிடிவி தினகரன், சசிகலாவையும் ஒண்ணா சேத்துக்கணும் அப்போதுதான் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கான வோட் கன்வெர்ஷனுக்கு உதவும்னு உறுதியாக சொல்லிகிட்டு வந்தாலும், அதனை ஏற்க மறுக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தேவையே இல்லைன்னு தொடர்ந்து சொல்லிக்கிட்டே வர்றாரு எடப்பாடி பழனிசாமி. நாம் இல்லாமல் பாஜகவால் கண்டிப்பாக ஜெயிக்க முடியாது, எப்படியும் நம்ம கிட்ட தான் வந்தாகணும்னு நெனைக்கிறாரு ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜகவுக்கும் தெரியப்படுத்திகிட்டே வர்றாரு.எடப்பாடி பழனிசாமி தரப்பிலுள்ள வடக்கு, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும், எக்காரணம் கொண்டும், ஓபிஎஸ், டிடிவி தினகரனை சேர்த்துக்கொள்ளக்கூடாது என்ற கருத்திலேயே உறுதியா இருந்து வர்றாங்களாம். ஓபிஎஸ் இணைவதால் தங்களுக்கு வாக்குகள் உயரப்போவதில்லை, ஆனால் தங்கள் முக்கியத்துவம் பறிக்கப்படும்னு அவங்க நெனைக்கிறாங்க. இருந்தாலும், தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்கள், தாங்கள் தெற்கில் வெற்றி பெற எப்படியும் ஓபிஎஸ், தினகரனை ஆதரிக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் வேணும்னு நெனைக்கிறாங்களாம் ஓபிஎஸ் இணையலாம்.. ஆனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அணியின் பல முக்கிய நிர்வாகிகள், தங்கள் தொகுதியிலேயே தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்குலத்தோர் வாக்கு வங்கி இருக்கிறதுனால , அவங்கள்லாம் ஓபிஎஸ்ஸோட நாம இணையணும்னு விரும்புறாங்களாம். ஆனால், மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் அதிகாரம் செலுத்தக்கூடாதுன்னு எல்லாரும் கோரஸா சொல்றாங்க. அதிமுக தொண்டர்கள் மனநிலை ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து செயல்படணும்னு விரும்புறாங்களாம். ஆனால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமாரும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதனும், திண்டுக்கல் சீனிவாசனும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சியில் இணைவதை சற்றும் விரும்பலையாம். ஒருக்காலும், ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி சேர்த்துக் கொள்ளக்கூடாது என ஒற்றைக்காலில் நிற்கிறாங்களாம். அதற்குக் காரணம், ஓபிஎஸ் – ஈபிஎஸ் என அதிமுக அணி பிரிந்ததன் காரணமாத்தான் இவங்க மூணு பேருக்கும் முக்கியமான பதவிகள் கிடைச்சுச்சு நத்தம் விஸ்வநாதனுக்கு துணை பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைச்சது. திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பொறுப்பு கிடைச்சது. ஆர் பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி கொடுத்தாரு ஈபிஎஸ். குறிப்பாக, ஓபிஎஸ் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களான இவங்க மூணு பேருக்கும் முக்கிய பதவிகளை வழங்குனாரு எடப்பாடி பழனிசாமி. பதவி + அதிகாரம் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினாலும், முக்குலத்தோர் வாக்கு வங்கியை இழந்துடக் கூடாதுன்னு தான் இந்த ஆக்ஷனை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் இணைத்தால் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் பறிபோகுமே, அந்தப் பதவிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு போய்டுமே, தென் மாவட்டங்களில் தங்கள் அதிகாரத்தை இழந்துவிடுவோமேங்கிற பதற்றத்தில் இருந்து வருகின்றனராம். சமீபத்தில், பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தபோது, மதுரை விமான நிலையத்தில் இவங்க மூணு பேருமே இருந்த நிலையில், ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைப்புக்கு பிரதமர் மோடி அச்சாரம் போட்டு விடுவாரா என அச்சத்தில் இருந்தார்களாம். இருவரையும் ஒரேமாதிரி நடத்தியதில் ஈபிஎஸ் அப்செட் ஆகி, ஓபிஎஸ் உடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என கட் அண்ட் ரைட்டாக தெரிவித்த பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்களாம்.
