மல்லிகைப்பூ மாதிரி இட்லியை ஒரு வில்லையை அப்ப்டியே கிள்ளி, பட்டும் படாமலும் வெங்காயச் சட்னியை தீண்டி, அப்படியே குளத்தில் மூழ்குவது போல், சாம்பாரில் முக்கி, நேராக வாய்க்குள் போட்டு சாப்பிடுவது இருக்கே. என்னா ருசி பாஸ், இதெல்லாம் அந்த காஞ்சு போன, ரப்பர் பீஸாவில் இருக்குமா?
டேஸ்டியா மட்டுமில்லாமல் மிகச் சிறந்த காலை உணவாக உலக ஆரோக்கிய மேம்பாட்டு கழத்தில் இட்லியை பரிந்துரை செய்துள்ளது என்றால் காரணமில்லாமலா. இட்லியில் அப்படி என்ன ஸ்பெஷல்…தெரிஞ்சுகோங்களேன்..அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.இதனால் இவற்றிலுள்ள சத்துக்கள் இரண்டு மடங்காக மாறுகின்றது.மாவு புளிப்பதால் பெருகும் நல்ல பேக்டீரியாக்கள் கல்லீரலுக்கும் குடலுக்கும் மிகவும் ஆரோக்கியத்தை விளைவிக்கின்றது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காரணம் -1 :
அரிசியிலும், உளுத்தம்பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு,கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
காரணம்-2
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
காரணம்-3 :
ஊற வைத்த கொண்டைக்கடலையில் இருக்கும் அதே சத்துக்களும், அமினோஅமிலங்களும், இட்லி தோசையில் கிடைக்கின்றன.
காரணம் -4 :
இட்லியில் இருக்கும் லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இடைவேளைகளில் பசியில்லாமல் மதியம் வரை தாக்கு பிடிக்கமுடியும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
காரணம் -5 :
இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்போது வைட்டமின் சி உள்ள சாம்பார் அல்லது புதினா,கொத்தமல்லி போன்ற துவையல். போன்றவை உள்ளது. காரணம் லைசின்அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது. வைட்டமின் சி தான். அது கீரைகளில் அதிகம் இருக்கிறது.
ஆகவே வெளி நாட்டு உணவுகளான பிரெட், ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ்களை விட்டுவிட்டு, நம்ம ஊர் இட்லிக்கு மாறுங்க
