3 மாத தவணை அவகாசம்.? யார் யார் இதற்கு தகுதியானவர்கள்.?எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.?

கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்தும், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினையும் மேம்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ஆர்பிஐ 3 மாதம் இஎம்ஐ அவகாசம் அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. கடந்த மார்ச் 27 அன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, வங்கிகள் மக்கள் செலுத்த வேண்டிய 3 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியது. இதனையடுத்து ஒவ்வொரு வங்கிகளாக தற்போது இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து கொண்டு இருக்கின்றன. இதில் தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியும் இதனை அமல்படுத்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி மார்ச் 1,2020 முதல் மே 31,2020 வரையிலான காலத்திற்கு உண்டான இஎம்ஐ தொகையினை செலுத்த ஹெச்டிஎஃப்சி அவகாசம் கொடுத்துள்ளது. மேலும் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் சில்லறை தவணை கடன் அல்லது வேறு ஏதேனும் சில்லறை கடன் வசதிகளைப் பெற்ற அனைத்து ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளார்களும் இதற்கு தகுதியானவர்கள் தான்.

மேலும் இவ்வாறு மார்ச் 1,2020 முன்னர் கடன் பெற்றவர்கள் இந்த தடைகாலத்தினை தேர்வு செய்யலாம். இவர்களின் கோரிக்கைகள் வங்கி அடிப்படையில் பரீசிலிக்கப்படும். இதில் அனைத்து வேளாண் (கிஷான் கோல்டு கார்டு) கடன்களும், மைக்ரோ நிதி வாடிக்கையாளர்களும் இதற்கு தகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. வங்கி உங்களிடம் எதுவும் கேட்காது? ஒரு வேளை நீங்கள் இந்த 3 மாத இஎம்ஐ அவகாசத்தினை தேர்வு செய்தால், வங்கி மே 31 வரை உங்களை எதுவும் கேட்காது. ஆனால் வட்டி விகிதத்தினை தொடர்ந்து செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நீங்கள் மார்ச் மாதத்திற்கான இஎம்ஐயினை செலுத்திவிட்டு, ஏப்ரல் மற்றும் மே மாததிற்கான தடை விதிக்கப்பட கேட்டால் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்படும். எனக்கு எந்த சலுகையும் வேண்டாம்? எனக்கு ஆர்பிஐ அறிவித்த எந்த சலுகையும் வேண்டாம் என நீங்கள் நினைத்தால் உங்கள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை. ஆக வழக்கம்போல நாங்கள் உங்கள் செயல்பாட்டினை செயல்முறைபடுத்துவோம் என்கிறது ஹெச்டிஎஃப்சி . போதுமான நிதி உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் வாடிக்கையாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஏனெனில் அதிக கட்டணத்தினை நீங்கள் தவிர்க்கலாம் இல்லையா?.

இஎம்ஐ அவகாசம் தேர்வு மக்களின் விருப்பம் தான் இந்த 3 மாதம் கால அவகாசத்தினை தேர்ந்தெடுப்பது முற்றிலும் மக்களின் விருப்பமாகும். எனினும் இவ்வாறு அவகாசம் கொடுப்பதால் கூடுதல் வட்டியை வாடிக்கையாளர்கள் கட்ட விரும்ப மாட்டார்கள். இதனால் அனைவரும் இதனை தேர்வு செய்யக்கூடாது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனினும் உங்கள் வங்கிக் கணக்கில் இந்த அவகாசத்தினை பெற விரும்பினால், உங்கள் இஎம்ஐயினை திரும்ப தருவதற்கும் நாங்கள் தயாராகத்தான் உள்ளோம் என்றும் ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது. Sponsored Upcoming Mobiles to be launch in April 2020 including… BGR எவ்வளவு கட்டணத்தினை செலுத்த வேண்டும்? நீங்கள் ஒரு வேளை இஎம்ஐ அவகாசம் கேட்டிருந்தால், நிலுவையில் உள்ள கடனுக்காக ஒப்பந்த விகிதத்தில் உள்ள வட்டி வசூலிக்கப்படும். மேலும் நீட்டிக்கப்படும் கால அவகாசத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் வசூலிக்கப்படும். மொத்தத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டாலும். வட்டியும் முதலுமாக சேர்த்து செலுத்தியே ஆக வேண்டும் என்பது தான் உண்மை. எப்படி இந்த இஎம்ஐ அவகாசத்தினை தேர்வு செய்வது? இஎம்ஐ அவகாசத்தினை பெற உங்கள் சம்மதத்தினை வங்கிக்கு வழங்க வேண்டும். எப்படி என்றால் 022-50042333. 022 – 50042211 என்ற எண்ணிற்கு கால் செய்து விருப்பத்தினை கூறலாம்.அல்லது https://apply.hdfcbank.com/vivid/afp?product=mo- என்ற லிங்கை பயன்படுத்தியும் விண்ணப்பிக்கலாம். அங்கு தேவையான விவரத்தினை கூறி உங்களது கடன் குறித்தான விவரங்களை கூறி, உங்கள் இஎம்ஐ கால அவகாசத்தினை பெறலாம். .

ஒரு வேளை நீங்கள் உங்களது பர்சனல் லோன் அல்லது வாகனக் கடனுக்காக இஎம்ஐ 31 மார்ச் 2020ல் செலுத்தியிருந்தால், நீங்களும் இந்த அவகாசத்தினை பெறத் தகுதியானவர் தான். ஆக தடையை பெறுவதற்காக நீங்கள் மேலே குறிப்பிட்ட செயல்முறையை பின்பற்றலாம். கிரெடிட் ஸ்கோர் குறையாதா? இவ்வாறு கட்டிய இஎம்ஐ யினை திரும்ப பெறுவதினாலோ அல்லது கால அவகாசத்தினை பெறுவதால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. ஆக நீங்கள் இதனை தேர்வு செய்து இந்த நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆர்பிஐ யின் அறிவுரையின் படி இது வாராக் கடனாகவும் எடுத்துக் கொள்ளப்படாது. இந்த சலுகை கிரெடிட் கார்டுக்கு உண்டா? இந்த அதிரடியான் சலுகை கிரெடிட் கார்டுக்கும் உண்டு. மார்ச் 1 முதல் மார்ச் 31 வரையில் செலுத்த வேண்டிய நிலுவைக்கு அவகாசம் கிடைக்கும். இந்த தற்காலிக தடை மே 31 வரை உங்கள் நிலுவை தள்ளி வைக்க முடியும். மே 31க்கு பிறகு நிலுவையில் ஒரு பகுதி அல்லது மொத்த நிலுவையும் வட்டியுடன் செலுத்தலாம். கிரெடிட் கார்டுக்கு அவகாசத்தினை எப்படி பெறுவது? கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐக்கு அவகாசத்தினை உங்களது ஆட்டோ பே (Auto Pay) ஆப்சனை முடக்கி வைக்கலாம். அல்லது நீங்கள் தானாக முன்வந்து இதனை ஒத்தி வைக்க மேற்கூறியவாறு செய்யலாம். உங்களது நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்டவற்றில் இதனை செயல்படுத்த முடியும். இவ்வாறு தேர்தெடுக்கும் போது உங்களுக்கு 3 மாதம் அவகாசம் கிடைக்கும். ஆனால் வட்டியை செலுத்துவதை தவிர்க்க வாடிக்கையாளர்களை நாங்கள் செலுத்த ஊக்குவிக்கிறோம் என்றும் ஹெஸ்டிஎஃப்சி கூறியுள்ளது. நிச்சயம் வட்டி வசூலிக்கப்படும் இந்த தற்காலிக அவகாசம் என்பது கால அவகாசத்தினை தள்ளி வைப்பதே தவிர, உங்கள் வட்டி தள்ளுபடி அல்ல என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆக முடிந்த மட்டில் நீங்கள் எப்போதும் போல உங்களது இஎம்ஐயினை செலுத்திவிடுவதே நல்லது என சொல்லாமல் சொல்கிறது இந்த அறிக்கை.