மழை பிடிக்காத மனிதன்- விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் வெற்றி   பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்

.போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின் (ஏ.எல்.அழகப்பன்) மகனை சலீம் (விஜய் ஆண்டனி) கொலை செய்ததால், அவரைப் பழிவாங்க அவரும் அவரது மனைவி தியாவும் செல்லும் காரின் மீது தாக்குதல் நடத்துகிறார் அமைச்சர். இதில் தியா இறக்க, சலீமின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. இது ஒரு மழை நாளில் நடப்பதால் ‘மழை பிடிக்காத மனிதனாகி’ விடுகிறார் சலீம்(!). நம்பும்படியாகவா இருக்கு?

சலீம் படத்தினுடைய தொடர்ச்சியாக தான் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சலீம் படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் சலீம் அமைச்சருடைய மகனை கொலை செய்துவிட்டு தப்பித்து விடுவார்.  தப்பித்து வரும் ஹீரோ விஜய் ஆண்டனி ஏஜெண்டாக மாறுகிறார். இதுதான் இந்த படத்தினுடைய ஒன்லைன் கதை.அடையாளத்தை மறைத்து, புதிய ஊரில் வாழும் கதாநாயகன், அங்கே கிடைக்கும் புதிய உறவுகள், அவர்களுக்கு வரும் பிரச்னை, அதற்காகக் களமிறங்கும் கதாநாயகன், படையெடுத்து வரும் பழைய பகை எனப் பழகிய மையக்கதையை, அந்தமான் பின்னணியுடன், புதுமையான ஆக்‌ஷன் மேக்கிங்குடன் கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். சலிப்பூட்டுகிறது முதற்பாதியில் சில ஆக்‌ஷன் காட்சிகளும், திரைமொழியும் ஓரளவிற்குக் கைகொடுத்தாலும், சிறிது நேரத்திலேயே அது நீர்த்துப் போய்விடுகிறது. அந்தமான் தீவின் வீடுகள், தெருக்கள், ஊரின் கட்டமைப்புகள் புதிய அனுபவத்தைத் தருகின்றன. அதேநேரம், யூகிக்கும்படியான பெரிய திருப்பங்கள் திரைக்கதையை சுவராஸ்யமற்றதாக்கி விடுகின்றன. விஜய் ஆண்டனியும் தனியாளாகக் காட்சிகளைக் கரைசேர்க்கத் தவறுகிறார். கதாநாயகனின் பின்னணியும் தெளிவாகயில்லாமல், மர்மமான முறையிலேயே இருப்பது எமோஷனலாகக் கதையிலிருந்து நம்மை விலக வைக்கிறது.மனைவி இறக்கும் போது மழை பெய்ததால், மழை பிடிக்காதாம்.. ‘ஒரு நியாயம் வேணாமா?’ என்பது போல் படம் பார்ப்பவர்களுக்கும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு ஆக்‌ஷன் காட்சிகள் சுத்தமாக ஒட்டவில்லை. .முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.!ஒரே மாதிரியான முகபாவம் கதையோடு கச்சிதமாக பொருந்தவில்லை.

ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி- விஜய் மில்டன் கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஜய் மில்டனின் கடைசி சில படங்கள் வெற்றியடையவில்லை. அதேபோல் விஜய் ஆண்டனியின் படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை. வருஷத்திற்கு பல படங்கள் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கிறார். கதை தேர்வில் கவனம் வேண்டும். பொதுவாகவே விஜய் ஆண்டனியை ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால், இந்த மழை பிடிக்காத மனிதன் படம் விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை.

Related posts:

கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

வங்கிகளின் மூலம் மக்களுக்கு ரூ.81,700 கோடி கடனுதவி ! நிர்மலா சீதாராமன் பேட்டி !! !!

இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ள 'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

மூட்டு தேய்மானம் # ஸ்டெம்செல் சிகிச்சை # டாஷ் மருத்துவமனை # சாதனை #

ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இணைந்து நடனமாடிய இதயத்தைத் தொடும் பாடலான 'நீதானே நீதானே...' என்ற பாடல் 'வேதா'வில் இருந்து இப்போது வெளியாகியுள்ளத...

துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்!

ரூ.84 கோடியில், 240 புதிய பஸ்கள் ! முதல்வர் துவக்கி வைத்தார்.!

Samsung India Launches‘Solve For Tomorrow 2025’ Competition With Over INR 1 Crore In Grants!