நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் பற்றிய பேச்சுகள் இன்னமும் முடியவில்லை. அந்த படத்தில் பழங்குடியின இளைஞர் ராஜாக்கண்ணு என்பவரை கொலை செய்த காவல்துறை அதிகாரியின் உண்மையான பெயரான அந்தோணிசாமி என்பதற்கு பதில் குருமூர்த்தி என்று சூட்டப்பட்ட இருக்கும்.

இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் எழுப்பி இருந்தார். அவரது கேள்விகள் பற்றிய விமர்சனங்கள் மீம்சுகளாக மாறி இணையத்தில் உலா வந்தன. படைப்பு சுதந்திரத்தில் தலையிட வேண்டும் என்றும் கருத்துகள் கூறப்பட்டன.

உங்க ஜாதிக்காரங்க எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்தீங்க… அன்புமணியை அட்டாக் செய்த ஜோதிகா..!
உங்களுக்கு அடிமையா பத்து பேர்… அடியாளுங்களா பத்து பேரை உருவாக்கியிருக்கீங்களே தவிர வேறு என்ன செய்திருக்கீங்க தலைவரே பதில் சொல்லுங்க

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் பற்றிய பேச்சுகள் இன்னமும் முடியவில்லை. அந்த படத்தில் பழங்குடியின இளைஞர் ராஜாக்கண்ணு என்பவரை கொலை செய்த காவல்துறை அதிகாரியின் உண்மையான பெயரான அந்தோணிசாமி என்பதற்கு பதில் குருமூர்த்தி என்று சூட்டப்பட்ட இருக்கும். அதேபோல் அக்கினி கலசம் இடம் பெற்று இருந்ததற்கும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் எழுப்பி இருந்தார். அதற்கு சூர்யா பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

அவரது கேள்விகள் பற்றிய விமர்சனங்கள் மீம்சுகளாக மாறி இணையத்தில் உலா வந்தன. படைப்பு சுதந்திரத்தில் தலையிட வேண்டாம் என்றும் கருத்துகள் கூறப்பட்டன.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ’பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
​இந்நிலையில், ஜோதிகா ராட்சசி படத்தில் பேசிய அரசியல் வசனத்தை பொறுத்தி அன்புமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெட்டிசன்கள் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதில், ‘’தலைவரே வணக்கம். உங்க கட்சிக்கு ஓவ்வொரு ஊருக்குள்ளும் கட்சி அலுவலகம் இருக்கு. ஆனா அதெல்லாம் மக்கள் குறைதீர்க்கும் மையமாக இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். உங்க ஜாதிக்காரங்க இவ்வளவு பேரு பின்னாடி இருக்காங்களே. அவங்களை காட்டி உங்க குடும்பமே மேல வந்துருச்சு.

ஆனா உங்க ஜாதிக்காரங்க எத்தனை பேருக்கு நீங்க வாழ்க்கை கொடுத்தீங்க. இட ஒதுக்கீடு படி உங்க ஜாதிக்காரங்க எத்தனை பேரை உயர் படிப்பு, கவர்மென்ட் வேலை வாங்கிக் கொடுத்து இருக்கீங்க? உங்களுக்கு அடிமையா பத்து பேர்… அடியாளுங்களா பத்து பேரை உருவாக்கியிருக்கீங்களே தவிர வேறு என்ன செய்திருக்கீங்க தலைவரே பதில் சொல்லுங்க’’ என ஜோதிகா ராட்சசி படத்தில் பேசும் வசனத்தை பொறுத்தி அன்புமணிக்கு முன்பே பதிலடி கொடுத்து விட்டதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Related posts:

இடியட்“ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
சிம்ரன் தனது புதிய படமான 'தி லாஸ்ட் ஒன்' ('The Last One') மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார் !
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் !
தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ...
G.V.பிரகாஷ் குமார் வெளியிட்ட “ இருளில் ராவணன் “ படத்தின் FIRST LOOK போஸ்டர் !
திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் ஏ ஆர் ரகுமான்
'ஜெய் ஹனுமான்' சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது!
"’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நான் இணை ஹீரோ" - நடிகர் சரத்குமார்!