5 ஆயிரம் கோடியை வாயில் போட்ட S.P வேலுமணி ? வேலுமணி தப்பிக்க வாய்ப்பில்லை. ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை நிச்சயம் ? ஸ்டாலின் அதிரடி!!

200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்ற சென்னையின் முக்கிய நகர்களில் உள்ள சாலைகள் ஒரு நாள் மழைக்கே தாக்குபிடிக்காமல் வெள்ளக்காடாக மாறியது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் மூன்றாவது நாளாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தியாகராயர் நகர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவிச்சுகிட்டு வர்றாங்க.சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திநகர்லேயே முகாமிட்டு மழை நீரை வெளியேற்றும் முயற்சில இருக்காரு.யாரோ செஞ்சு தப்புக்கு யாருக்கு தண்டனைன்னு பாருங்க. தியாகராயர் நகரில் முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரால் போக்குவரத்து பாதிப்போட வியாபாரமும் முடங்கி போச்சு..

சென்னையில் தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்றது. இந்த திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளே தற்போதைய அவலநிலைக்கு காரணம்னு புகார் வந்திருக்குது. தியாகராயர் நகரில் உள்ள பாண்டி பஜார் கடை வீதியை அழகுபடுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் ரூ.120 கோடி செலவில், ஸ்மார்ட் கம்பம், அழகிய சாலை, அகண்ட நடைபாதை, சிசிடிவி கேமரா, வைஃபை வசதின்னு பாண்டி பஜார் கடைவீதி அழகாக வடிவமைக்கப்பட்டது.

இருவழிச் சாலயை ஒரு வழி பாதையாக மாற்றியதோட, நடைபாதை வியாபாரிகளையும் அப்புறப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தத்திட்டம் முதலில் மக்களிடம் வரவேற்பையே பெற்றது. ஆனால் மழைநீர் வடிகால்கள் கூட முறையாக அமைக்கபடாத இத்திட்டத்தால் ஒரு நாள் மழைக்கே பாண்டி பஜார் சாலை வெள்ளக்காடாக மாறிடுச்சு. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளே இதற்கு காரணம்னு சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியிருக்காங்க. இதேபோல், மேற்கு மாம்பலம், கே.கே. நகர் பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இருவழி சாலையை ஒருவழி பாதையாக மாற்றும்போது முறையாக திட்டமிடவில்லை. கழிவுநீர் கால்வாய் இருந்த இடத்தை முழுமையாக தூர்வாராமல் அதன் மீதே நடைபாதைகள் அமைக்கப்பட்டதால் தண்ணீர் வெளியேற வழியில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட வடிகால்களின் உயரம் மிக குறைந்த அளவில் இருப்பதால் அதில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய முடியவிலைன்னு அடுக்கடுக்காக புகார்கள் வந்கனதிருக்குது.. அதிமுக-வினர் கமிசன் அடிக்கவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் சென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக களத்தில் இறங்கி, மழை சேதங்களை ஆய்வு செய்வதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். தமது சொந்த தொகுதியான கொளத்தூரில் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பல்வேறு பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகுப்புகளையும் முதலமைச்சர் வழங்கினார். அத்தோடு மழை பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை பார்வையிட்ட ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெறும் பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கனமழை பாதிப்புகளை சரிசெய்ய அரசின் சார்பிலும், கட்சி சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, மழை நீரை அகற்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவில்லை. கமிசன் மட்டுமே வாங்கியுள்ளார். தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் எஸ்.பி.வேலுமணி, அதிகளவில் ஊழல் செய்திருக்கிறார் என்றும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் நிதி பெற்று நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. டெண்டர் வழங்கியதில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்த பணியாளர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் வெள்ள பாதிப்புகள் சரி செய்யப்படும். அடுத்ததாக ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் பேட்டியளித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில், “2015ம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் முன்னாள் சென்னை மாநகராட்சி தலைமைப்பொறியாளர் நந்தகுமார் இணைந்து திட்டமிட்டு டெண்டர் செட்டிங் செய்து கட்டிய மழைநீர் வடிகால்கள் காரணமாகவே, சனியன்று பெய்த ஒரே மழையில் பல்லை இளித்துவிட்டது. இருவரும் பதில் சொல்வார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “சென்னை வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட நியமித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி யார் தெரியுமா? முன்னாள் மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ. எஸ். இவர் தான் 2015 வெள்ளத்திற்கு பிறகு சென்னையில் மழை நீர் கால்வாய்கள் கட்டிய போது சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்து, டெண்டர்கள் செட்டிங் செய்து கட்டிய வடிகால்கள் ஊழலில் மூழ்கி கிடப்பதை பார்வையிடுகிறார். சபாஷ்” என்று கூறுகிறார்.

அதேபோன்று, “முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் இணைந்து சென்னையின் மழை நீர் வடிகால் பணிகளின் டெண்டர்களை செட்டிங் செய்து சீரழித்து இன்றைய வெள்ளத்திற்கு முக்கிய காரணமான சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க திரணியில்லாமல், அந்நபரையே வெள்ள நிவாரணப் பணிகள் செய்ய நியமித்து அருகில் அமர வைத்து அமைச்சர்கள் அழகு பார்க்கலாமா?” என்று கடுமையான வினாவை எழுப்பியுள்ளார்.