11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ” சிறகன் ” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது !

ஹைபர் லிங்க் நான் லினியர் கிரைம் திரில்லர் படம் ” சிறகன் ” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது. MAD பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படத்திற்கு ” சிறகன் ” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.

கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : சேட்டை சிக்கந்தர்
இசை : ராம் கணேஷ். K
பாடல்கள் : வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம்.
கலை : ஹரிபிரசாத் பால்
கூலாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது வாங்கிய ஹரிபிரசாத் MA இந்த படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார்.
மக்கள் தொடர்பு : மணவை புவன்
தயாரிப்பு : துர்கா பேட்ரிக்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் – வெங்கடேஷ்வராஜ். S ( இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் MF. Tech – மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் பெற்றவர் )படம் பற்றி இயக்குனர் வெங்கடேஷ்வராஜ். S பகிர்ந்தவை..ஹைபர் லிங்க் நான் லினியர் முறையில் கிரைம் திரில்லர் ஜானரில் 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது தான்.

மற்ற கிரைம் திரில்லர் படங்களை விட இதை ஒரே இரவில் நடக்கும் ஒரு ஏதார்த்தமான கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறோம்.பஞ்சன் சிறகன் எனும் வகையை சார்ந்த பட்டாம்பூச்சியின் இடது புறம் வெள்ளை மற்றும் கருப்பு நிறமும், வலது புறம் காக்கி நிறமும் இருக்கும் அதற்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருப்பதாலும்,
இந்தவகை பட்டாம்பூச்சியின் வாழ்க்கை எப்படி ஒரே நாளில் துவங்கி ஒரே நாளில் முடிகிறதோ அதே போல் இந்த படத்தின் திரைக்கதையும் ஒரே இரவில் நடந்து முடிவதால் இந்த படத்திற்கு ” சிறகன் ” என்று பெயர்வைத்தோம்.

படப்பிடிப்பு முழுவதும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றது என்றார்.மற்றும் இந்த படத்தில் பணியாற்றியுள்ள இயக்குனர் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்களில் சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல திரைப்படங்களை வெளியிட்டு வரும் உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா இந்த படத்தை ஏப்ரல் 20 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

Related posts:

ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

அவெஞ்சர்ஸ் ரசிகர்களே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்!

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதை, படம் உருவாவதற்கு முன்பே புத்தகமா...

*”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!*

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன் வழங்கும் இரட்டை இன்னிசை மழை: கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!