உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி ! முடக்கினார் டொனால்ட் டிரம்ப் !

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அடுத்த அதிரடியாக உலக சுகாதார நிறுவனத்துக்கான (WHO) நிதியை முடக்குவதாக அறிவித்துள்ளார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்.சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா வைரஸால் மிக மோசமான அழிவுகளை சந்தித்து உள்ளது அமெரிக்கா.இந்த நிலையில் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு நிறுவனம் மீது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். சீனாவுடன் கை கோர்த்துக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது எனவும் சீறி இருந்தார் டிரம்ப்.

மேலும் அந்த அமைப்புக்கான நிதியை நிறுத்தப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கும் உலக சுகாதார நிறுவனம் பதிலடி கொடுத்திருந்தது.இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் தனது கடமையை செய்ய தவறிவிட்டது என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா மிக உக்கிரம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி பேரழிவு.
டிரம்ப்பின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குடெர்ரெஸ், நிதி நிறுத்த முடிவு என்பது இந்த சூழ்நிலையில் மேற்கொள்வது சரியான நேரம் அல்ல என விமர்சித்திருக்கிறார்.

Related posts:

ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார்அட்டை!

ஆசஸ் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு சந்தைகளில் அதன் கால்தடத்தை பலப்படுத்துகிறது

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்க அரசு தடை ?

பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

சீனாவை விட்டு வெளியேறும் பெரிய நிறுவனங்கள்! ஜப்பான் நிவாரண நிதி !!

இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்? ஐ.நா எச்சரிக்கை ?

மிஸ் டிபேட்டர் எனப் பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் !