யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2 !

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2.
இரண்டு பாடல்களையும் எழுதியவர் கபிலன்வைரமுத்து.

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்று இசை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய இசை வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு பாடலையும் எழுதியவர் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து. இந்தியன் 2 திரைப்படத்தில் கபிலன்வைரமுத்து வசனமும் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் 'லவ் பைட்'!

ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

*உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!*

'ஹரி ஹர வீர மல்லு பாகம்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் ப...

‘அவதார்’ திரைப்படத்திற்கு இந்தியாவின் ஆன்மீகத்துடன் வலுவான தொடர்பு இருக்கிறது என்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்!*

'தணல்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

பொழுதுபோக்கு உலகில் புதிய புரட்சி: கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் 'கதைஷார்ட்ஸ்'!