நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெப் சீரிஸான ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன்’ நாளை (அக்டோபர் 2) ப்ரீமியர் ஆகிறது!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெப் சீரிஸான ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன்’  (அக்டோபர் 2) ப்ரீமியர் ஆகிறது!

உலகளவில் ஓடிடி தளத்தில் முன்னணியில் இருக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் முதன் முறையாக அதன் தமிழ் ஒரிஜினல் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ சீரிஸை அக்டோபர் 2 அன்று ப்ரீமியர் செய்கிறது. ‘தூங்காவனம்’, ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘இரை’ வெப் சிரீஸ் போன்ற ஸ்டைலிஷ் த்ரில்லர் கதைகளை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா தான் இந்த வெப்சீரிஸையும் இயக்கியுள்ளார்.

நாளை ப்ரீமியர் ஆக இருக்கும் ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன்’ தொடர் விறுவிறுப்பான ஏழு எபிசோடுகளை கொண்டிருக்கிறது. ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேமிங் துறையில் பணிபுரியும் தம்பதி எதிர்கொள்ளும் உணர்வுப்பூர்வமான போராட்டங்களைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்கள் எப்படி நம் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வை மாற்றியமைக்கிறது என்பதை பல அடுக்குகளுடன் இந்தக் கதை பேசியிருக்கிறது.

இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா பகிர்ந்து கொண்டதாவது, “கேமிங் துறையில் பணிபுரியும் திருமணமான தம்பதிகள் பற்றி இந்தத் தொடர் பேசுகிறது. இன்றைய சமூகவலைதளங்கள் எப்படி அவர்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் தலையிடுகிறது என்பதையும் காட்டியுள்ளோம். இதுமட்டுமல்லாது பெண் காவல் அதிகாரி, 15 வயது பெண் மற்றும் 65 வயதுடைய வசந்தா என இவர்கள் வாழ்விலும் சமூகவலைதளம் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் இதில் பார்க்கலாம். ‘தி கேம்’ என்பது நம்முடைய நேரம் மற்றும் ஆழமான மனித கதைகள் பற்றியது” என்றார்.

நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பகிர்ந்து கொண்டதாவது, “தனது வேலையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு மிக்க கேம் டெவலப்பர் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சமூகவலைதளதங்களில் எதையும் தைரியமாக பேசுபவள் காவ்யா. இதனால் அவளுக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் அதைவிட அதிக வெறுப்பும் கிடைக்கிறது. இது அவளுக்கு தனிப்பட்ட வாழ்விலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து தனது குடும்பத்தையும் சொந்தங்களையும் எப்படி காக்கிறாள் என்பதுதான் கதை. வேலையையும் தனிப்பட்ட பொறுப்புகளையும் குழப்பிக் கொள்ளும் பெரும்பாலான தற்கால மாடர்ன் பெண்களை காவ்யா கதாபாத்திரம் பிரதிபலிக்கும்”.

நடிகர் சந்தோஷ் பிரதாப், ” நான் இதுவரை நடித்திராத கேம் டெவலப்பர் கதாபாத்திரத்தில் இந்தத் தொடரில் நடித்திருக்கிறேன். இதுவரை அதிரடியான, வலுவான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற பிம்பம் இந்தத் தொடர் மூலம் உடையும் என நம்புகிறேன். வழக்கமான உடற்பயிற்சி, அழகுப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை தவிர்த்து கதாபாத்திரத்திற்காக மட்டும் இதில் கவனம் செலுத்தினேன். தோற்றத்தை காட்டிலும் என் கதாபாத்திரம் பேச வேண்டும் என உழைத்திருக்கிறேன். இந்த தொடரில் என்னை பார்வையாளர்கள் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள்” என்றார்.

Related posts:

சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!

இனிகா புரொடக்சன்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அனிமேஷன் திரைப்படமான 'கிகி & கொகொ'!

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் 'டீன்ஸ்' டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

லோகா-- அத்தியாயம்-1 சந்திரா --- விமர்சனம்..!

உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கூட்டணி வைக்கிறது ஜியோ !

'வாட்ஸ் ஆப்' தகவல் உலகம் முழுவதும் கடும் கட்டுப்பாடு !

இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை!