‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது!

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது. மனதைத் தொடும், மக்களின் மொழியை பேசும் திரைப்படமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மறு வெளியிட்டின் போதும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெறும் என்று தயாரிப்பாளர்களான ஏ ஆர் என்டர்டெயின்மென்ட், டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிவிஆர் சினிமாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரதன் இசையமைத்திருந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்திற்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு மேற்கொள்ள பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு செய்திருந்தார். வசனங்களை மணிகண்டன் கே எழுத ஏ ஃபெலிக்ஸ் ராஜா மற்றும் மனோஜ் குமார் கலை இயக்கத்தை கையாண்டிருந்தனர். நடனம்: தினேஷ் மற்றும் ஸ்ரீகிருஷ்; பாடல்கள்: சினேகன், ஆர் ஜே விஜய், மாதேவன், ராகேந்து மெளலி மற்றும் எம் சி சேத்தன்; உடைகள் வடிவமைப்பு: பிரியா ஹரி மற்றும் பிரியா கரன்; சவுண்ட் எபெக்ட் மற்றும் டிசைன்: சூரேன் ஜி மற்றும் அழகியக்கூத்தன்; டி ஐ: சேது செல்வம்; வி எஃப் எக்ஸ்: அக்ஷா ஸ்டுடியோஸ்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; பப்ளிசிட்டி டிசைன்ஸ்: என்டாக்கீஸ்; ஸ்டில்ஸ்: சந்துரு; சப்டைட்டில்ஸ்: ரேக்ஸ்.

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி  பாராட்டுகளை குவித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் வரும் செப்டம்பர் 19ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறது.

Related posts:

நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் 'அக்யூஸ்ட்'!

நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழா!

கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் முயற்சி!

பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அளித்த கர்நாடக அரசுக்கு இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி நன்றி !

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் 'டீன்ஸ்' டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

QR கோடு மோசடி ? ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே உஷார்!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெப் சீரிஸான 'தி கேம்: யு நெவர் பிளே அலோன்' நாளை (அக்டோபர் 2) ப்ரீமியர் ஆகிறது!

'ஹரா' படத்தின் மூலம் மோகனை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கிய விஜய்ஶ்ரீ ஜி, 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார்!