உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட‌ திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பிரியாணி டீஸர் ரம்ஜான் அன்று வெளியீடு

நரேன் பாலகுமார் இசையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உற்சாகமிக்க பிரியாணி பாடலை பாடியுள்ளனர்’அக்யூஸ்ட்’ டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று, டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்காக நரேன் பாலகுமார் இசையில் ஜி வி பிரகாஷ் குமார் பாடிய ஷோக்கா நிக்கிறியே முதல் சிங்கிளின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் சிங்கிள் பிரியாணி டீஸர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப் படுகிறது. பிரியாணி பாடலை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி பாடியுள்ளனர்.

உற்சாகமிக்க இப்பாடலின் வரிகளை ஹைட் எழுதி இருப்பதோடு வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி உடன் இணைந்து பாடியுள்ளார். பிரியாணி பாடலில் உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து திரையில் தோன்றுகின்றனர். விரைவில் இந்த இரண்டு பாடல்கள் உள்ளிட்ட படத்தின் முழு ஆல்பம் முன்னணி ஆடியோ நிறுவனத்தால் வெளியிடப்படும்.

முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் ‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்துள்ளனர். பிரபல ஆக்ஷன் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கைவண்ணத்தில் மூன்று பரபரப்பு சண்டைக் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும். மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாளுகிறார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைந்து நிறைவுற்று கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் ‘அக்யூஸ்ட்’ வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Related posts:

‘ஹார்ட்பீட் சீசன்2’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது...ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புதிய எபிசோட் வெளியாகும்!

இந்தியாவில் களமிறங்கும் சீன பேட்டரி ஸ்கூட்டர் !

ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் ஏடிஎம் கார்டை பிளாக் செய்தாலும், பணத்தை எளிதாக எடுக்கலாம்.!

வசீகர குரல் மன்னன்’ சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’-தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா !

'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!

வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது!

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் ! ' புஜ்ஜி ' திரைப்பட நடிகர் வரதராஜன் பழனிச்சாமி!!