அந்தகன் – விமர்சனம் !

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அந்தாதூண் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த அந்தகன் திரைப்படம். ஸ்ரீராம் ராகவன் என்பவர் தான் இந்தியில் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டதோடு, இப்படத்திற்கு சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த நடிகர் ஆகிய மூன்று தேசிய விருதுகளையும் வென்று அசத்தியது

அந்தகன் கதையை பொறுத்தவரை, பார்வையற்றவராக இருக்கும் படத்தின் நாயகன் எப்படியாவது லண்டன் சென்று மிகப் பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கு ஏற்றார் போல ஒரு விபத்தின் மூலம் அவருக்கு காதலி கிடைக்கிறாள். காதலி வந்த பின் அவரது வாழ்வில் நடக்கக்கூடிய அடுத்தடுத்த சம்பவங்கள் தான் படமே. சிம்பிளான கதையாக இருந்தாலும் அதை தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் பிரம்மிப்பூட்டி இருந்தார் ஸ்ரீராம் ராகவன். அதே பிரம்மிப்பை தமிழிலும் ஏற்படுத்தினார்களா என்பதை  பார்ப்போம்.டாப் ஸ்டார் பிரஷாந்த் 90 கிட்ஸின் பேவரட் ஸ்டாராக வலம் வந்தவர். இவரை எப்போது பெரிய திரையில் பார்க்கலாம் என்று நினைத்தவர்களுக்கு செம ட்ரீட் ஆக தற்போது வெளிவந்துள்ள அந்தகன் எல்லோரும் எதிர்ப்பார்த்த ட்ரீட் ஆக அமைந்ததா, பார்ப்போம்.

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே நடித்து வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் தான், அந்தகன்.க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் மேஸ்ட்ரோ, மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது தமிழிலும் உருவாகியிருக்கிறது. தமிழில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரனும், ஆயுஷ்மான் குர்ரானா கதாபாத்திரத்தில் பிரசாந்தும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்தும் நடித்து உள்ளார்கள். கார்த்திக் முக்கியத்துவம் மிக்க கேரக்டரில் நடித்து உள்ளார்.வனிதா விஜயகுமார், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலரும் நடித்து உள்ளார்கள்.பார்வையற்ற இசை கலைஞராக வரும் பிரசாந்த் தன்னை அறியாமலேயே ஒரு கொலையில் சிக்கி கொள்ள அதன் பின்னர் நடக்கும் திருப்பங்கள் தான் படத்தின் கதை என கூறப்படுகிறது. க்ரைம் த்ரில்லருக்கு ஏற்றார் போல் படத்தை உருவாக்கி உள்ளார்கள்.

பிரஷாந்த் ஒரு பியோனோ ஆர்டிஸ்ட் ஆக இருந்து வருகிறார், அதுவும் பார்வையற்றவராக நடிக்கிறார். அப்படி ஒரு நாள் ப்ரியா ஆனந்த் நட்பு கிடைக்க அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கிறது.

ப்ரியா ஆனந்த்தின் பாரிலேயே ஒரு வேலை பிரஷாந்த்துக்கு கிடைக்க, இதில் வரும் வருமானத்தை வைத்து லண்டன் போக முயற்சி செய்து வருகிறார். அந்த நேரத்தில் நடிகர் கார்த்திக் அறிமுகம் பிரஷாந்துக்கு கிடைக்கிறது.

கார்த்திக் அவருடைய மனைவியை(சிம்ரன்) திருமண நாள் அன்று சர்ப்ரைஸ் செய்ய, பிராசந்தை வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு வந்து பார்த்த பிராசாந்திற்கு ஒரு கடும் அதிர்ச்சி.

கார்த்திக் அங்கு இறந்து கிடக்கிறார், சமுத்திரக்கனி மற்றும் சிம்ரனும் இணைந்து இந்த கொலையை செய்ய, இதை பிரசாந்த் பார்க்கிறார், அட அவருக்கு தான் கண் தெரியாதே என்று நீங்கள் கேட்கலாம், ஆமாங்க பிரசாந்த் கண் தெரியாதது போல் நடித்து வருகிறார், இதன் பிறகு நடக்கும் பதட்டமும், சுவாரஸ்யமும் தான் மீதிக்கதை.

அதிலும் கதையை அப்படியே பாண்டிச்சேரி கதைக்களத்திற்கு மாற்றியமைத்து பெரிய மாற்றம் இல்லாமல் அப்படியே எடுத்துள்ளனர்.அதற்கு பிரசாந்த் அப்படியே பொருந்தி போகிறார், கண் தெரியும் போதே தெரியாதது போல் அவர் நடிக்கும் காட்சிகள் அத்தனை தத்ரூபம், அதை விட உண்மையாகவே அவருக்கு கண் தெரியாமல் போகும் காட்சி அவர் அடையும் பதட்டம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

அதிலும் கார்த்திக் இறக்கும் இடத்தில் நடக்கும் சம்பவங்கள் தெரிந்தும் தெரியாதது போல் பிரசாந்த் நடிக்கும் இடம் தான் டாப் ஸ்டார் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.பிரசாந்திற்கு பிறகு படத்தில் கலக்கியிருப்பதும் சிம்ரன் தான், இதுவரை ஹீரோக்களுடன் வெறும் டூயட் பாடும் ஹீரோயினாக பார்த்த இவர், சீரியல் கில்லர் போல் மிரட்டியுள்ளார்.

அதிலும் கே எஸ் ரவிகுமாரை அவர் கொல்லும் இடம் அவரின் கொடூர குணத்தின் உச்சத்தை காட்டுகிறது. ஊர்வசி, யோகிபாபு, கே எஸ் ரவிகுமார் என அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.போலிஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி ஆரம்பத்தில் வெறைப்பாக இருந்தாலும், தன் மனைவி வனிதாவிடம் உண்மை தெரிந்தும் பம்மும் இடம் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் ஆரம்பம் கதைக்குள் செல்லும் 20 நிமிடம் கொஞ்சம் கொஞ்சம் படம் மெதுவாக செல்கிறது, ஆனால் அதன் பிறகு முக்கியமாக கார்த்திக் கொலைக்கு பிறகு படம் விறுவிறுவென போகிறது.அதிலும் இரண்டாம் பாதியில் பிரசாந்த் கிட்னி-யை திருட ப்ளான் செய்யும் கும்பல், அவர்களிடம் தப்பிக்கும் காட்சி என பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

பிரசாந்தின் கதாபாத்திரமே ஒரு பியானிஸ்ட் என்பதால் படத்தின் மிகப்பெரும் பலம் இசை என்பதை உணர்ந்து சந்தோஷ் நாராயணன் கலக்கியுள்ளார், அதோடு ஒளிப்பதிவு பாண்டிச்சேரியை டாப் ஆங்கிளில் காட்டும் ஒரு காட்சியே பிரமிப்பு தான், ஏதோ பாரீன் போல் எடுத்துள்ளனர்.படத்தில் இடம்பெறும் சிறு சிறு வேடங்களில் கூட முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சில காட்சிகளில் வந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தியாகராஜன், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார்.

‘அந்தாதுன்’ இந்தி படத்தை பார்த்தவர்களுக்கு புதிய அனுபவம் கொடுக்கும் வகையில் சில மாற்றங்களோடு இயக்கியிருக்கும் இயக்குநர் தியாகராஜன், அந்த படத்தை பார்க்காதவர்களுக்கு காட்சிக்கு காட்சி திருப்பங்களை வைத்து மிகப்பெரிய திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

Related posts:

வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி...

ஹாலிவுட் நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் விருஷபா படத்தில் இணைந்துள்ளார் !!

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

லாரி ஓட்டுவது எளிதல்ல? 'கைதி' பற்றி கார்த்தி !

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை !

“’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இணைந்திருக்கும்” - ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன்!

டிரைவிங் லைசென்ஸ் பெற வந்துவிட்டது தொழில்நுட்பம் !

அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!