வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? அப்ப கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும் !!

வேலைக்கு செல்லும் பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் வேலை செய்து வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு அவசர அவசரமாக வேலைக்கு செல்கின்றனர். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு தனது குடும்பத்தை கவனிப்பதிலேயே அவர்களதுநேரம் செலவாகி விடுகிறது.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், பெண்கள் தங்களது உடலின் ஆரோக்கியத்தைக் கூட கருத்தில் கொல்லாது தனது குடும்பத்திற்காக எப்போதும் வேலை வேலை என சென்ற வண்ணம் உள்ளார்.பெண்களே ! உங்களது உடல் ஆரோக்கியம் சரியாக இருந்தால் தான், நீங்கள் உங்கள் உடம்பத்தை கவனிக்க முடியும். எவ்வளவு ஏழைகள் இருந்தாலும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலிரும் பெண்களானாலும், வேலைக்கு செல்லும் பெண்களானாலும் கீழ்கண்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

நமது உடலில் நாம் செய்யும் வேலைகளை செய்யத்தக்க ஆற்றல் அதிகமாக தேவை. ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை. இந்த கலோரி அளவு ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவை பொறுத்து மாறுபடும்.30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 1600 முதல் 1800 கலோரிகள் தேவை. நமக்கு தேவையான கலோரிகளின் அளவுக்கேற்ப உணவை உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.உடற்பயிற்சி என்பது நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. வீட்டு வேலை மற்றும் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கி, எளிதான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.இவ்வாறு உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் எடை கூடுதல், இதை நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.

பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் கண்டிப்பாக உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாக மார்பக பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று.ஏனென்றால், சிலருக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மார்பகங்களில் வலி, வீக்கம் மற்றும் கட்டிகள் போன்ற ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து, சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்கள் அதிகமான் நேரம் உட்கார்ந்தே பணிபுரிகின்றனர். ஆனால்,இது பெண்களின் உடலுக்கு நல்லதல்ல. இவ்வாறு அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால்,இதயநோய்கள் மற்றும் சர்க்கரை நோய்கள் போன்ற நோய்கள் வாய்புள்ளது.எனவே, பெண்கள் எங்கு வேலை பார்த்தாலும், அதிக நேரம் உட்காராமல், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து நடப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று தண்ணீர்.நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது தண்ணீர் தான். எனவே பெண்கள் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொள்ள வேண்டும்.இருந்தாலோ, இல்லாவிட்டாலோ தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பது நமது உடலாரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.