விவாகரத்துகள் குறைய மிக தேவையான ஒன்று திருமணத்துக்கு முந்தைய கவுன்செலிங் !

வணக்கம் !வாழ்வின் மிக உன்னதமான விஷயம் உறவு .உறவு என்பது அடிப்படை மட்டுமல்லாது நம்மை ஒவ்வொரு கட்டத்திற்கும் நகர்த்தி செல்லும் ஒரு உந்துதல் தரும் கருவி கூட . அந்த உறவின் அருமை மற்றும் முக்கியத்துவம் புரியாமல் இன்று நம் மக்கள் அதை எவ்வளவு பாழாக்க முடியுமோ அவ்வளவு பாழாக்கி கொண்டு வருகிறார்கள் .இதற்க்கு யாரும் விதி விலக்கல்ல.படிப்போ பதவியோ அந்தஸ்தோ உறவுகளை பாதுகாத்துக்கொள்ள உதவுமா என்றால் இல்லை.

ஆனால் புரிதல் என்கிற ஒரு காரணி முக்கியத்துவம் வகிக்கிறது .புரிதலுடன் இன்னும் சில முக்கியமான வாழ்க்கை திறன்களையும் நாம் கவனமாக கடைபிடிக்கும்போது உறவுகள் காப்பாற்ற படுகின்றன.உறவுகளை மேலாண்மை செய்வது எப்படி என்கிற இந்தபகுதியில் இந்த வாரம் கணவன் மனைவி உறவு சிறக்க என்ன செய்யலாம் என்பதை காண்போம்

சமீபத்தில் ஒரு இள வயது தம்பதியினரான சுஜித் (வயது27)-தீபா(19) வை சந்திக்க நேர்ந்தது,திருமணமாகி மூன்றே மாதங்களான நிலையில் பெண் தனக்கு இந்த பந்தத்தில் உள்ள குறைகளை பட்டியலிட்டு கூறி தனக்கு தற்காலிக அல்லது நிரந்தர பிரிவு வேண்டும் என்று வீட்டில் பிரச்சினை எழுப்பியிருக்கிறாள் .எனவே பெண்ணின் தாய் குழப்பம் மற்றும் மிகுந்த மன உளைச்சல் அடைந்து . அவர்களை கவுன்செலிங் க்கு அழைத்து வந்தார். முதலில் பெண்ணிடம் பேசினேன்.4 வருட காதல்,பின்னர் வழக்கமான பிரச்சினைகள் இவற்றுடன் கல்யாணம் நடந்துள்ளது .அப்போது தீபா, தாய் தந்தையின் அறிவுரைகளை கேட்கும் மனநிலையில் கூட இல்லை. சற்று பிடிவாதமாகவே இந்த கல்யாணத்தை செய்துகொடிருக்கிறாள்.

ஆனால் என்னிடம் பேசும்போது,தனக்கு இந்த வாழ்க்கை சற்றும் பிடிக்கவில்லை ,அவன்(?) நடத்தை- அளவுக்கதிகமான அன்பு,அன்யோன்யம் இவை மகிழ்ச்சி தராமல் மாறாக எரிச்சல் மற்றும் மன அழுத்தத்தை மட்டுமே தருகிறது என்றாள்.இருவருக்கும் .வீட்டுவேலைகளில் போட்டி சண்டை,ஒருவர்மீது ஒருவருக்கு சந்தேகம்(தங்களது போன் கால் எடுக்கவில்லை என்றால்) வாக்குவாதம் எல்லாம் உள்ளது ..ஆனால பெண்ணிடம் பேசும்போது ஒன்று தெளிவாக புரிந்தது.கண்டிப்பாக முதிர்ச்சியற்ற பெண் அவள் .இரண்டு விஷயங்களில் அதை கவனித்தேன் ஒன்று .அன்று அவ்வளவு பிடிவாதமாக அந்த பையனை விரும்பிய நீ இன்று உன்மேல அதிக பிடிப்பாக இருப்பதே பிடிக்கவில்லை என்கிறாயே என்றதற்கு அவளிடம் தெளிவான பதில் இல்லை .இரண்டு விவாகரத்து வரை யோசிக்கவைக்கும் அவளுடைய முதிர்ச்சியற்ற சிந்தனையும் அவளை நிலைப்பு தன்மை கொண்ட பெண்ணாக காட்டவில்லை

அடுத்து சுஜித்திடம் பேசும்போது அந்த இளைஞன் முதிர்ச்சியுடன் பேசினார்.,உண்மையான காதல்,.வெளியுலக அறிவு இவை தெரிந்தது இப்போது தான் அனுபவிக்கும் சில மன கசப்புகளை கூட சகஜமாக அதே சமயம் மெல்லிய வருத்தததுடன் கூறினார். மனைவி சற்றே ஆதிக்கம் செலுத்துவது,நெருங்கவிடாமல் இருப்பது ,அவளின் திடீர் நடத்தை மாற்றம் இவையே தற்போதய பிரச்சினைகள்.என்றார் .

தீர்வு என்ன?

சரிசெய்ய வேண்டிய விஷயங்கள் என்று பார்க்கும்போது,பெண் தன்னுடைய செல்ல வளர்ப்பு முறையை இங்கும் பின்பற்றுவதை விடவேண்டும் தன கணவனிடம் மனம் விட்டு பேசி இயல்பாக இருக்கவேண்டும் நிலையான மனநிலையை பழக்கிகொள்ள வேண்டும்.குறிப்பாக தற்காலிக பிரிவோ அல்லது விவாகரத்து என்கிற முடிவோ கண்டிப்பாக பலன் தராது என்பதை அவள் உணரவேண்டும் என்று விளக்கினேன்.
இளைஞரிடம் முதிர்ச்சி இருந்தாலும் அதை மனைவியை கையாளவும் உபயோகிப்பது அவசியம் என்றும் எதுவுமே (அன்பு உட்பட,)அதீதமானால் கண்டிப்பாக சலிப்பு ஏற்பட்டுவிடும். என்பதையும் புரியவைத்தேன்.
பின்னர் பெண்ணின் பெற்றோரிடமும் பேசினேன் .பெண்ணின் அம்மாவிடம் ஆரம்பம் முதலே மகளின் மீதும் அவள் படிப்பின் மீதும் உள்ள அதீத அக்கறையினால் விட்டுகொடுத்தே போன அம்மா இப்போதும் அதே பாசத்தை காட்டி அவளை மேலும் முடக்குதல் தவறு என்றேன் இனிமேலாவது அவளை அதிகம் அரவணைக்காமல் அவளின் கடமைகள் பொறுப்புகள் முக்கியம் அதையும் கூட அவள் இருப்பிடத்தில் இருந்தே செய்யவேண்டும் என்றும் மகளுக்கு அறிவுறுத்த சொன்னேன்

.

பொதுவான உறவு மேலாண்மை நுட்பங்கள் என்று பார்க்கும்போது,,

Ø மனம் விட்டு பேசுதல்

Ø அடுத்தவரை அதிகம் கட்டுபடுத்தாமல் இருத்தல்

Ø அதிகம் எதிர்ப்பார்ப்பை தவிர்த்தல்

Ø அடுத்தவர் செயலை நீங் கள் தீர்மானித்தால் தவறு

Ø அதை விமர்சிக்கவும் நமக்கு உரிமையில்லை

Ø அவரவர்களுக்கான இடத்தை அவர்களுக்கு விட்டு தருதல் அவசியம்

Ø அவர்களிடம் உள்ள நேர்மறை விஷயங்களுக்கு அதிகம் முக்கிய்யதுவம் அளித்தல்

Ø தனிமையை தவிர்த்தல்

Ø பிடித்த விஷயத்தில் மனதை ஈடுபடுத்துதல்

Ø அளவான பாசம் அக்கறை உரிமை இவை போதும்

Ø கணவன் மனைவி இருவருக்குமே சுய பரிசோதனை செய்து தங்களை திருத்திக்கொள்ள்ளும் தெளிவு வேண்டும்

Ø இருவரும் கூட தங்களிடம் என்னென்ன விஷயங்களை வெளிபடுத்தவும் தெரிய வேண்டும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விவாதிக்கலாம

Ø அன்பை வெளிபடுத்தவும் தெரிய வேண்டும்

Ø அன்னியோன்யத்தை மேம்படுத்தும் வழிகளை அறிந்துகொள்ளுதல் அவசியம்

Ø இருவரும் ஒன்றாக பொழுதை கழிக்கும் நேரம் போதுமானதா என்று கவனிக்கவும்

Ø இருவருமே மற்றவரது சுய மரியாதைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் .

Ø தங்கள் பிரச்சினையால் தங்கள் பெற்றோருக்கு மன அழுத்தம் தராமல் பார்த்துகொள்ளவும்

Ø எந்த ஒரு பிரச்சனையையும் அவ்வளவுதான் இதற்க்கு தீர்வே இல்லை என்று எதிர்மறையாக எண்ண வேண்டாம்

Ø பதட்டமான அணுகுமுறை வேண்டாம்

ஈகோ வேண்டாமே :

கணவன் மனைவி உறவு உட்பட எல்லா உறவிலுமே மன நிம்மதி முக்கியமானது. அதை மனதில் கொண்டு , ஈகோ வுக்கோ அல்லது மற்ற எந்த சுயநலமான சிந்தனைக்கோ நாம் இடம் கொடுக்க கூடாது.என் நிம்மதி என் கையில்,எதிராளியிடம் என் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை எதிர்ப்பார்ப்பது வீண்.குற்றம் சொல்லுதல் எனக்குதான் மன உளைச்சலை தரும்.அவரவர் வேலையை அவரவர் பார்த்துகொண்டு அடிப்படை அன்பு ,நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடர்ந்தால் ரச்சினை எழ வாய்ப்புகள் குறைவு

வருமுன் காப்போம் !

மேலும் இன்று பெருகிவரும் இள வயது தம்பதியனரின்

விவாகரத்துகள் குறைய மிக தேவையான ஒன்று என்னவென்றால் PRE MARITAL COUNSELING .எனப்படும் திருமணத்துக்கு முந்தைய கவுன்செலிங் .இதில் பங்கு பெறும்போது ,அவர்களுக்கு குடும்பநல ஆலோசகரால் ,மேற்கண்ட உறவு மேலாண்மை யுக்திகள் முன்கூட்டியே கற்பிக்கப்படும்போது, மண வாழ்க்கையை எளிதாகவும் தெளிவாகவும் எதிர்கொள்ளுகிறார்கள் . மேற்கண்ட குடும்ப விவகாரத்திலும் ஒன்று தெளிவாக தெரிந்தது .முதிர்ச்சியற்ற வயதில் பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. ஒரு குறைபாடே.இதுபோன்ற சூழ்நிலையிலும் திருமணத்திற்கு முந்தைய கவுன்செலிங் பெரிதும் உதவுகின்றது.

(திரு)மணம்-(நறு)மணம் பெற!

எனவே தம்பதியினர் மேற்கண்ட மிக எளிய விஷயங்களை கடைபிடித்தாலே போதுமானது ஆண் பெண் இருவருக்குமே அலுவலக வேலை சுமைகள் அதிகமாகிவிட்ட இந்த வாழ்க்கை சூழ்நிலையில் குறைந்தபட்சம் வீட்டில் மன நிம்மதி தரும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது அத்தியாவசியமாகிறது .வாழ்க்கையில் மிக சிறந்தவராக தேர்ந்தெடுத்து நம் வாழ்க்கையை அமைத்துகொள்வது சாத்தியமில்லை .எனவே சிறு மன கசப்புக்கள் கருத்துவேறுபாடுகள் வரலாம் .அவற்றை முடிந்த வரை பேசி தீர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம் .தேவைப்படும் பட்சத்தில் குடும்ப நல ஆலோசகரின் உதவியை நாடவும் தயங்க கூடாது .வாழ்த்துக்கள் !