விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் லொள்ளு சபா !

2004ல் விஜய் தொலைகாட்சி ஆரம்பித்த நிகழ்ச்சி தான் லொள்ளு சபா. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படத்தின் கதையை மையமாக எடுத்து கொண்டு அதில் லொள்ளு சபா செய்யும் காமெடிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் அடிமை .

சினிமாவை தொடர்ந்து பார்த்து அலுத்து போன ரசிகர்களுக்கு புதுவித ட்ரீட்மெண்ட் தான் இந்த லொள்ளு சபா. லொள்ளு சபாவை பொருத்த வரையில் வெற்றி படங்களை தான் கலாய்ப்பார்கள் தோல்வி படங்களை கலாய்க்க மாட்டார்கள் என்றெல்லாம் கிடையாது. இவர்கள் எந்த படத்தை எடுத்து கிண்டல் செய்தாலும் ரசிகர்கள் அந்த படத்தை நினைவு கூறி லொள்ளு சபாவின் கிண்டல்களை ரசிப்பதே வழக்கம்.

கிட்டதட்ட மூன்று வருடங்கள் லொள்ளு சபா ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் என்று சொல்ல கூடிய பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களின் ஓட்டத்தை துவங்கினார்கள். இதில் சந்தானம் ,யோகிபாபு, சுவாமிநாதன், ஜீவா, மனோகர், உதய், ஈஸ்டர், சாஷா என்று பலரும் புதிய முகங்களாக மக்களுக்கு அறிமுகமாகி தங்களின் திறமைகளை மக்களுக்கு காட்டி சிரிக்க வைத்து பிரபலங்கள் ஆனார்கள் .

லொள்ளு சபாவின் காமெடி மட்டுமல்ல லொள்ளு சபாவின் ஓபனிங் சாங் என்று சொல்ல கூடிய நிகழ்ச்சியின் ஆரம்ப பாடல் கூட மக்களின் மனம் கவர்ந்தது தான். தற்போதைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஆரம்ப பாடல்கள் அதிகம் இடம்பெறுவதில்லை இடம் பெற்றாலும் பெரியதாக வரவேற்பு இருக்காது ஆனால் அந்த சமயத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மிக ரசனைதன்மை மிக்க பாடல்கள் இருக்கும்.லொள்ளு சபா நிகழ்ச்சியின் ஆரம்ப பாடலில் வரும் வரிகளை நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் தங்களின் வாயில் உச்சரிக்க துவங்கி விடுவார்கள். தற்போது விஜய் தொலைகாட்சி செய்யும் விளம்பரங்களில் கூட அந்த ஓபனிங் பாடலை தான் போட்டு விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இந்த அளவுக்கு ரசிகர்களுக்கு விருப்பமான ஒன்றாக லொள்ளு சபாவின் அனைத்து விஷயங்களும் இருந்தது. கொரோனாவால் அறிவிக்கபட்ட ஊரடங்கு நேரத்தில் அனைத்து தொலைகாட்சிகளும் தங்களின் பழைய நாடகங்களை மறு ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் லொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டனர்.இதனால், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, லொள்ளு சபா நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.