வாட்ஸ் ஆப் ஹேக்கிங் பிரச்சனை விஸ்வரூபம் !சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு !!

ஹேக்கிங் சர்ச்சைக்கு எதிராக வாட்ஸ் ஆப், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.வாட்ஸ் ஆப் ஹேக்கிங் பிரச்சனை தற்போது உலகம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. இந்தியாவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக தற்போது புதிய விவரங்களும், தகவல்களும் வெளியாகி வருகிறது. இந்தியாவில் முக்கிய பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள், களப்பணியாளர்கள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களிடம் இருந்து முக்கியமான தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது.இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்று நிறுவனம்தான் இந்த ஹேக்கிங்கை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த நிறுவனம் இந்தியாவில் அரசியல்வாதிகளையும் குறி வைத்துள்ளது. அதோடு ராணுவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வேலை பார்க்கும் பெரிய அரசு அதிகாரிகளையும் குறி வைத்து உள்ளது. இது தொடர்பாக தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம், என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளது.இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ் ஆப் நிறுவனம் மற்றும் என்எஸ்ஓ நிறுவனம் இரண்டிற்கும் எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை என்ஐஏ விசாரிக்க வேண்டும்.

பேஸ்புக் நிறுவனத்தையும் இதில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மூத்த தலைவர் கேஎன் கோவிந்தாச்சார்யா சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தனி நபர்களின் சுதந்திரத்தையும், தனி மனித அந்தரங்கத்திற்கும் எதிராக இந்த ஹேக்கிங் நடந்துள்ளது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பல நாடுகள் இதேபோல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு எதிராக பல்வேரு மாகாணங்களில் வழக்கு தொடுடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.