வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் ! ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷனின் நிதி திரட்டல் நிகழ்ச்சி !

2020 ஆம் ஆண்டுக்குள் வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவதற்காக தங்களது வருடாந்திர நிதி திரட்டல் நிகழ்ச்சியை ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் நடத்தியது• சங்கீத கலாநிதி . அருணா சாய்ராம் , பல பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து வழங்கிய இசை கச்சேரி இதன் மைய நிகழ்வாக இடம்பெற்றது.

சென்னையை அடித்தளமாக கொண்டு இயங்கி வருகின்ற , லாபநோக்கற்ற சேவை நிறுவனமான ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் , அதன் முதலாவது வருடாந்திர நிதிதிரட்டல் நிகழ்வை மைத்ரி என்ற பெயரிலான தங்களது அமைப்பின் வழியாக மிகச்சிறப்பாக நடத்தியது . மூத்த குடிமக்களுக்கான ஆதரவுக் கரமாக செயல்படும் மைத்ரி , வயது வந்த முதியவர்கள் வாழ்க்கையை நடத்துவதில் எதிர்கொள்கின்ற கடும் சிரமங்களையும் , சவால்களையும் எளிதாக்குவதற்காக தொடங்கப்பட்டதாகும் . சென்னையிலுள்ள மியூசிக் அகாடமி வளாகத்தில் சங்கீத கலாநிதி அருணா சாய்ராம் அவர்களின் அற்புதமான இசைக் கச்சேரியின் வழியாக இந்த மாலை நேர நிகழ்வானது , உயிரோட்டமுள்ளதாக மாறியது . சேவையாற்ற வேண்டுமென்ற ஒரே பொறுப்புறுதியைக் கொண்டிருக்கும் மைத்ரி . வயது முதிர்ந்த நபர்களுக்கான ஆதரவு மற்றும் நிதிக்காக பொதுமக்களின் விழிப்புணர்வைச் சார்ந்து செயலாற்றி வருகிறது . வசதியற்ற , வயது முதிர்ந்த நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும் , அவர்களின் மனக்காயங்களை குணமாக்குவதிலும் மிகச்சிறப்பான பணியை நான்கு ஆண்டுகள் செய்ததற்குப் பிறகு , 2020 ஆம் ஆண்டுக்குள் 1,00,000. ( ஒரு இலட்சம் ) ஆதரவற்ற முதியோர்களை அக்கறையுடன் கவனித்து அவர்களுக்கு சேவை வழங்க ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் உறுதி பூண்டிருக்கிறது.

இந்தியாவில் வசிக்கும் முதியவர்களில் 70 % – க்கும் அதிகமான நபர்கள், நிதி ரீதியாக பிறரை சார்ந்தே வாழ்கின்றனர் . இத்தகைய நிலையில் உயிர் பிழைப்பதற்கு பெண்களுள் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் , பொருளாதார ரீதியாக பிறரை சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது . இத்தகைய நிலைமை நிலவுகின்ற நிலையில் , அமைதியான வாழ்க்கையை இனிமேல் நடத்துவதற்கு அவர்களுக்கு அவசியப்படுகின்ற அனைத்தையும் வழங்குவதன் மூலம் இத்தகைய சூழ்நிலையில் இந்த பெரும் சுமையை கட்டுப்படுத்துவதை தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது . ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டசத்து வழங்குவது , ஏழை எளியவர்களுக்கான முதியோர் இல்லங்களுக்கு நிதியுதவி அளிப்பது . வயது வந்த நபர்களுக்கான , நிதிவசதி குறைவான சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி ஆதரவை வழங்குவது . வயதியற்றவர்களுக்கு மருந்துகள் . மருத்துவ சாதனங்கள் மற்றும் அறுவைசிகிசசைளுக்கு நிதியுதவி வழங்குவது ஆகியவை மைத்ரியின் முக்கியமான குறிக்கோள்களுள் சிலவாக இருக்கின்ற நிலையில் , வரவிருக்கும் நிதியாண்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிற பல்வேறு செயல் நடவடிக்கைகளுக்கும் அவசியப்படும் நிதிக்கு இந்த நிகழ்வு பெரிதும் உதவும்.

ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷனின் அறங்காவலர் திரு . ஜி . ஸ்ரீனிவாசன் இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில் , ” எங்களது எளிய தொடக்கத்திலிருந்து நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கிறோம் . நமது முதியவர்களுக்காக நாங்கள் அறிமுகம் செய்திருக்கும் பல்வேறு செயல் நடவடிக்கைகளில் நான் பெருமை கொள்கிறேன் . நாம் வாழும் இந்த உலகத்தில் இன்னும் சற்று கூடுதலாக அன்பையும் , அக்கறையையும் சேர்த்து வழங்குவது எனக்கு மிகப்பெரிய ஆனந்தத்தைத் தருகிறது என்று நான் குறிப்பிட்டாக வேண்டும் . நமது முதியவர்கள்தான் வழிகாட்டல் மற்றும் ஞானத்திற்கான நமது தாண்களாக திகழ்கின்றனர் . அவர்கள் நம்மை கவனித்துக்கொண்டதைப்போல அவர்களை நாம் அக்கறையுடன் கவனிக்கவில்லையென்றால், முதியோர்களது ஆன்மீக நலனுக்காக கோயில்களுக்கு செல்லும் புனித பயணங்களை மேற்கொள்ள ஆதரவு வழங்குவது , அவர்களது மனநலனை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு மாதமும் ஆலோசனை வழங்குவது மற்றும் ஒவ்வொரு மாதமும் முதியோர்களது இறுதி சடங்குகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்குவது ஆகியவை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் பிற முனைப்பு திட்டங்களாகும் . இந்தியாவில் இயங்கி வருகின்ற வெகுசில உடல்நல பராமரிப்பு அறக்கட்டளைகளுள் ஒன்றாக கூடுதல் பொறுப்பினைக் கொண்டிருக்கும் மைத்ரி,முதியோர்களுக்கான கவனிப்பு சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக மக்களை ஒன்றுகூட்டவும் திட்டமிட்டிருக்கிறது . மைத்ரியின் செயல்பாடு , சென்னை மாநகரோடு அடங்கிவிடுவதில்லை . தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் இதன் சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன .

ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் குறித்து : உடல்நலம் மற்றும் கல்வி அம்சங்களில் ஆக்கப்பூர்வ தாக்கத்தை கொண்டு வர வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது சென்னையை தளமாகக்கொண்டு இயங்கி வருகின்ற லாபநோக்கற்ற சேவை அமைப்பாகும் . இளம் தலைமுறையினருக்கு அவர்களது கல்வி தேவைகளுக்கும் மற்றும் மூத்த தலைமுறையினருக்கு அவர்களது மருத்துவ தேவைகளுக்கும் உதவிக்கரம் நீட்டுவது இதன் செயல்பாடாக இருந்து வருகிறது . இந்தியாவில் இயங்க வருகின்ற வெகுசில உடல்நல பராமரிப்பு அறக்கட்டளைகளுள் ஒன்றாக கூடுதல் பொறுப்பைக் கொண்டிருக்கும் இது , அதிகம் பேசப்படாத பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் பக்கவாத பாதிப்பு ஆகியவை மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது .