ரெலிகேர் வழங்கும் புதிய காப்பீடு திட்டம் ‘சூப்பர் மெடிகிளைம்’ !

மருத்துவ காப்பீடுகளை வழங்கும் ரெலிகேர் நிறுவனம் சூப்பர் மெடிகிளைம் என்ற பெயரில் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மிகவும் அபாயகரமான நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு காப்பீடு தரும் வகையில் இந்த மருத்துவ காப்பீட்டுத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் அஷுதோஷ் சக்தி ஷ்ரோத்ரியா தெரிவித்தார். இந்த காப்பீட்டு திட்டத்தில் கேன்சர் மெடிகிளைம், ஹார்ட் மெடிகிளைம், கிரிடிகல் மெடிகிளைம், ஆபரேஷன் மெடிகிளைம் என நான்கு வகையான காப்பீட்டு வசதிகள் உள்ளன.

கேன்சர் மெடிகிளைம் திட்டத்தில் ஆரம்ப நிலை புற்றுநோய் முதல் மிக முற்றிய நிலை வரையிலான சிகிச்சைக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. ஹார்ட் மெடிகிளைம் திட்டத்தில் 17 வகையான ஆபத்தான அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. குறிப்பாக ஹார்ட் அட்டாக், பைபாஸ் சர்ஜரி உள்ளிட்டவற்றுக்கு இந்த காப்பீடு தீர்வாக அமையும்.

கிரிடிகல் மெடிகிளைம் காப்பீட்டு திட்டமானது புற்றுநோய், ஹார்ட் அட்டாக், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பக்கவாதம் உள்ளிட்டவற்றுக்கு காப்பீடு அளிக்கிறது. அதேபோல ஆபரேஷன் மெடிகிளைம் காப்பீட்டில் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ காப்பீட்டை தொடர முடியாது. ஆனால் ரெலிகேர் வழங்கும் காப்பீடானது, அறுவை சிகிச்சைக்குப்பிறகும் வாழ்நாள் முழுவதும் காப்பீட்டை தொடர முடியும். அதேபோல எத்தனை முறை வேண்டுமானாலும் மருத்துவ கிளைம் கோர முடியும் என்றார் அஷுதோஷ்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஆயுஷ்மான் திட்டத்தின்கீ்ழ் 65 லட்சம் குடும்பங்கள் அதாவது சராசரியாக 2.5 கோடி மக்களுக்கு ரெலிகேர் காப்பீடு அளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.