ரூ. 740 கோடி மோசடி செய்த புகாரில் ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பற்பசை முதல் வலிநிவாரணி போக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை தயாரித்து வரும், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸி நிறுவனம். உலகளவில் 150 நாடுகளில் கிளைகளும், 50 வருட முன் அனுபவமும் கொண்டது. நிறுவனத்தின் புரமோட்டர்களான மல்விந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஷிவிந்தர் சிங், ரெலிகர் நிறுவனத்திற்காக ரூ. 740 கோடி கடன் பெற்றனர்.
எனினும் நிதி நெருக்கடி காரணமாக ரான்பாக்ஸி நிறுவனத்தை, ஜப்பானை சேர்ந்த, மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 2008ம் ஆண்டு விற்றனர்.2018 டிசம்பர் மாதம், ரூ 740 கோடி மோசடி செய்ததாக, சிங் சகோதரர்கள் மீது புதுடில்லி காவல் நிலையத்தில் பொருளாதார குற்றத்தின் கீழ் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து, இவர்கள் மீது கடந்த மே மாதம் , அமலாக்க இயக்குநரகத்தின் கீழ், நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், இரு சகோதரர்களான ஷிவிந்தர் சிங் , மல்விந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.