மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் ‘என்டிஆர் நீல்’ பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது!

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைக்கோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக ‘என்டிஆர்நீல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2024 தொடங்கி இருப்பதால், என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் படம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. என்டிஆர் மற்றும் இயக்குநர் நீல் தங்களது குடும்பத்தினருடன் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர்.

ரசிகர்களை குஷிப்படுதுத்தும் வகையில், இந்தப் படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என வெளியீட்டுத் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிளாக்பஸ்டர் ஹிட்களுக்கு பெயர் போன இயக்குநர் பிரஷாந்த் நீல், தனது தனித்துவமான மாஸ் விஷன் மூலம் என்டிஆரின் திரை இருப்பை புதிய உயரத்திற்கு எடுத்து செல்ல இருக்கிறார். இது நிச்சயம் திரைத்துறையில் புதிய அலையை உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்டத்தை போலவே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கொசராஜு ஆகியோர் தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சலபதி நிர்வகிப்பார்.

நடிகர்கள்: மாஸ் நாயகன் என்.டி.ஆர்.

தொழில்நுட்ப குழு:
தயாரிப்பு வடிவமைப்பு – சலபதி,
ஒளிப்பதிவு- புவன் கவுடா,
இசை – ரவி பஸ்ரூர்,
தயாரிப்பாளர்கள் – கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கொசராஜு
எழுத்து, இயக்கம் – பிரசாந்த் நீல்

Related posts:

குழந்தைகளுடன் பார்க்கிற மாதிரியான படங்கள் அபூர்வமாகத்தான் வெளி வருகின்றன. குழந்தைகளை வெகுவாக கவரும் விதமாக வந்திருக்கும் படம் தான் டபுள்டக்கர்.!
நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், "படை தலைவன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியிட்டார் !!
வாட்சப் பயன்படுத்துபவர்களுக்கு அசத்தலான ஐந்து வாட்ஸ் ஆப் டிப்ஸ்!
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!
ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ !
கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி 1
வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது!