மலையாளம் பேசும் ‘ஆதார்’!

தமிழில் பெரும் பாராட்டுகள் பெற்ற வெற்றிப் படத்தை மலையாளத்தில் யோகி பாபு முதன்மைப் வேடத்தில் நடிக்க ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார்

ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

மலையாளத்திலும் ‘ஆதார்’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள்.

‘ஆதார்’ மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், “2022ம் ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘ஆதார்’ பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் ‘ஆதார்’ படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் ‘ஆதார்’ எடுத்துரைக்கும் என்று இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மேலும் தெரிவித்தார்.

கருணாஸ் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய ராம்நாத் பழனிகுமார் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ மற்றும் ஜீவா-நயன்தாரா நடித்த ‘திருநாள்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ‘ஆதார்’ மலையாளம் ரீமேக் பணிகளை விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Related posts:

'சிக்மா' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

இந்தியாவில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை!

கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்"- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

பான்-இந்திய திரைப்படமான, நடிகர் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது!

வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது!

வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி...

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து டெரிஃபிக் வில்லன் ஆரவ்வின் மைக்கேல் கதாபாத்திரத்தை இயக்குநர் மகிழ் திருமேனி அறிமுகப்படுத்தியுள்ளா...

கார்ப்பரேட்டுகளின் கூடாரமாகும் அரசியல் கட்சிகள் !