போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க, கூகுளின் ‘Search by Image” ஆப்ஷனை வாட்ஸ்அப் தனது பீட்டா வெர்ஷனில் வழங்கியுள்ளது.
சமூகவலைதள நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது போலி செய்திகள். வைரல் எனும் பெயரில் வேகமாக தகவல் மற்றும் செய்திகள் சென்று சேர்கிறதோ இல்லையோ, போலி செய்திகள் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகின்றன. இதனால், ஏற்படும் பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
போலி செய்திகள் பரவுவதை தடுக்கவேண்டும் என சர்வதேச அரசுகளும் சமூக வலைதளநிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளன.இதனால், புதிய தொழில்நுட்ப உதவிகளை பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் நாடி வருகின்றன. கூகுளின் புகைப்படத்தைக் கொண்டு தேடும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் தனது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து வருகிறது.
வாட்ஸ்அப்பில் ஒருவர் பகிரும் புகைப்படம் கூகுளில் நம்பத்தகுந்த நிறுவனங்களால் பகிரங்கப்பட்ட புகைப்படமா? அல்லது போலியாக தயாரிக்கப்பட்ட புகைப்படமா என்பதை அறியும் வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இடம்பெற்றுள்ளது.இதன்மூலம், நமக்கு பகிரப்பட்ட ஒரு வாட்ஸ்அப் தகவல் உண்மையா? அல்லது போலியா என்பதை பயனர்கள் இந்த வசதி கொண்டு அறிந்துகொள்ள முடியும்.