பொருளாதார மந்த நிலை காரணமாக, தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் ?

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்.,), இந்திய கப்பல் போக்குவரத்து (எஸ்.சி.ஐ.,) மற்றும் இந்திய சரக்கு பெட்டக கழகம் (கான்கார்) உள்ளிட்ட 5 நிறுவனத்தில், அரசின் வசமுள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டில்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பி.பி.சி.எல்., எஸ்.சி.ஐ., மற்றும் கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள பங்குளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ளதால், வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதன்படி, நாட்டின் இரண்டாவது பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், மத்திய அரசின் வசமுள்ள 53.29 சதவீத பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.பி.சி.எல்., முற்றிலும் தனியார் மயமாகும். மேலும் எஸ்.சி.ஐ., நிறுவனத்தில் அரசின் வசமுள்ள 63.75 சதவீத பங்குகளில் 53.75 சதவீத பங்குகளையும், கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள 54.80 சதவீத பங்குகளில், 30.9 சதவீத பங்குகளை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts:

தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல் !

ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரி வசூலிக்க மத்திய அரசு திட்டம்..!

உலக வரலாற்றில் முதல் ஊரடங்கு ! மருத்துவ வரலாறு !!

தமிழக அரசு- மின்வாரியத்தில் மட்டும் ரூ.11,679 கோடி நட்டம்: அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி.!!

சோலார் மின்உற்பத்தி ! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு !!

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

உத்தர பிரதேச காவல்துறை வன்முறை ! அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!

ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்.....!