பேட்டரியை விட 30 மடங்கு அதிகம் சேமிக்கும் மின்கருவி ! லண்டன் விஞ்ஞானிகள் சாதனை !!

லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாலிமர் பிலிம்கள் மூலம் புதிய டைஎெலக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் பாலிமர் பிலிம்கள், டை எெலக்ட்ரிக் கெபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன. தற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கெபாசிடரை விட, பாலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை எெலக்ட்ரிக் கெபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரம் சேமிக்கிறது. பேக்கரிகளில் பப்ஸ் தயாரிக்க, மாவு, பல அடுக்குகளாக மடிக்கப்பட்டு அழுத்தப்படும்.

அதைப் பார்த்து பாலிமர் பிலிம்களை பல அடுக்குகளாக, டைஎலக்ட்ரிக் கெபாசிடர் சுற்றி, அதிக சேமிப்பு திறனுள்ள கருவியை உருவாக்கும் ஐடியா கிடைத்ததாக ராணி மேரி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை, குறைந்த செலவில் சேமிக்க இந்த புதிய கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளது.

T