‘புஷ்பா 2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான ஜோடி புஷ்பா & ஸ்ரீவள்ளி இருவரும் ’புஷ்பா2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்க்’ என்ற அழகான பெப்பி பாடலான ‘சூசேகி’யுடன் வந்துள்ளனர்!

தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடலும் படத்தின் டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிளும் ரசிகர்களைக் கவந்துள்ளது.

இந்த வீடியோ பாடல் படத்தின் பிரம்மாண்ட செட்டில் இருந்து எப்படி உருவாகிறது என்ற காட்சிகளோடு வெளியாகியுள்ளது. இது நிச்சயம் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த காட்சிகளில் படக்குழுவினரிடையே இருக்கும் நட்பும் தெளிவாக தெரிகிறது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த பாடலை படமாக்குவதையும், மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பிரபல நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் இசையில் நடனமாடுவதையும் ரசிக்கிறார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது மேஜிக் இசையில் இந்த பாடல் மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவந்துள்ளார். சூசேகி (தெலுங்கு), அங்கரோன் (இந்தி), சூடானா (தமிழ்), நோடோகா (கன்னடம்), கண்டாலோ (மலையாளம்), மற்றும் ஆகுனர் (பெங்காலி) உள்ளிட்ட ஆறு வெவ்வேறு மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது:. இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவரான மெல்லிசை ராணி ஸ்ரேயா கோஷல் 6 மொழிகளிலும் இந்தப் பாடலை அற்புதமாகப் பாடியுள்ளார்.

’புஷ்பா தி ரைஸ்’ படத்தில் புஷ்பாவிற்கும் ஸ்ரீவள்ளிக்கும் இடையேயான அழகான காதல் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இப்போது ’புஷ்பா 2 தி ரூலி’ல் ரசிகர்கள் இருவருக்கும் இடையே இன்னும் அழகான முதிர்ச்சியடைந்த காதலைப் பார்க்க இருக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜுன் அதிக எனர்ஜியோடு ஸ்வாக பாடல் மேக்கிங்கில் தோற்றமளிக்க, ராஷ்மிகா தனது ’சாமி சாமி’ பாடல் வசீகரத்துடன் மீண்டும் வந்துள்ளது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

சமூகவலைதளங்களில் ரீல்ஸ் ஹிட்டாக ஹுக் ஸ்டெப்பும் இந்தப் பாடலில் உள்ளது. படத்தின் முதல் சிங்கிளான ‘புஷ்பா புஷ்பா’ யூடியூப்பில் 2.26 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளுடன் ஆறு மொழிகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. படத்தின் இசை உரிமைகள் டி-சீரிஸ் இசை நிறுவனத்தின் வசம் உள்ளது. ’புஷ்பா 2: தி ரூல்’ ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

Related posts:

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் 'குரங்கு பெடல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை?மத்திய அரசு தீவிரம் !
லாக் டவுன் டைரி பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா !
இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா : நெகிழும் 'புஜ்ஜி @ அனுப்பட்டி 'திரைப்பட இயக்குநர் ராம் கந்தசாமி !
‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு -
விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, ருக்ஷார் தில்லானின் பிக் பட்ஜெட் சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் 'ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ' நவம்பர் 17ஆம் தேதி இந்தியா முழ...