பி.எஃப்-இல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும்!

பி.எப் உறுப்பினர்களின் பிறந்த தேதி ஆவணங்களில் தவறாக இருந்தால்,அதை சரிசெய்ய, ஆதார் அட்டை போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளை கள அலுவலகங்களுக்கு பிஎப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பிஎப் ஆவணத்தில் பிறந்த தேதியை மாற்றம் செய்வதற்கு செல்லத் தகுந்த ஆவணமாக ஆதார் ஏற்றுக் கொள்ளப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் மற்றும் பிஎப் ஆவணங்களில்உள்ள பிறந்த தேதிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 3 ஆண்டுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும், திருத்தம் செய்ய பிஎப் சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அப்படி விண்ணப்பிக்கப்பட்டால் உடனே பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என கள அலுவலகங்களுக்கு பிஎப் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், பிஎப் நிதியில் இருந்து 75 சதவீத தொகையை சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், பிஎப் சந்தாதாரர்கள் விண்ணப்பிக்க வசதியாக இணையத்தில் புதிய வழிகாட்டி குறிப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.