‘பிழை’ – பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது ஒரு பாடம் !

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கிறது இந்தப்படம் , அதே சமயம் குழாதை படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்கிற கருத்தை வலுவாகச் சொல்லியிருக்கிறார்கள்.நடிகர்கள் சார்லி , ஜார்ஜ் ,மைம்கோபி மூன்று பேருமே கல் உடைக்கும் தொழிலாளர்கள்.நாங்கள் தான் படிக்க வில்லை . குழந்தைகளாவது நன்றாகப் படுக்கட்டும் என்கிற எண்ணத்தில் அவர்களை படிக்க வைக்கிறார்கள். காக்கா முட்டை ராஜேஷ் தலைமையிலான 3 பேர் அடிக்கும் லூட்டி இடை வேளை வரைத் தொடருது. கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை இடைவேளை வரை கணிக்க முடியாதபடி இயக்குநர் கதையை நகர்த்தி இருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு அந்த ஊரைச் சேர்ந்த கதாநாயகன் ஊரை விட்டு காணாமல் போய் விட்டு உஊருக்குத் திரும்பியதைப் பார்த்து 3 நிறவா காடுக்கும் 13 சிறுவர்களுக்கும் இது போல பணம் சமாதிக்கணும் என்று முடிவு செய்து வீட்டை விட்டு ஓடுகிறார்கள் . அந்த 3 பேரும் ஒரு ஓட்டல் முதலாளியிடம் மாட்டுகிறார்கள் . அவர் அந்த 3 சிறுவர்களையும் தனது ஓட்டலில் வேலைக்கு அமர்த்துகிறார்.

அந்த ஓட்டலில் 3 பேரும் படும் கஷ்டத்தை பார்க்கிற பெற்றோர்கள் நிச்சயம் கண்ணீர் நடிப்பார்கள். குழந்தைகளை மைம்கோபி, ஜார்ஜ் மற்றும் சார்லி ஆகியோர் தேடி வருகிறார்கள். ஒளிப்பதிவாளர் ஏழை தொழிலாளிகளின் குடிசைகள் மற்றும் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை அருமையாகப் படம் பிடித்திருக்கிறார் . அந்த 3 சிறுவர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.அந்த ஓட்டலில் கொடுமை தாங்காமல் அங்கிருந்து ஓடுகிறார்கள்.ஆனால் அதில் ராஜேசை மட்டும் காணவில்லை.ஓட்டலில் இது போல தவறுகள் தொடர்ந்து நடக்கிறது.காவல்துறை லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதில்லை.அந்த 2 சிறுவர்களும் தப்பித்து எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள்.இதற்கிடையில் பிள்ளைகளைத் காணவில்லை என்று புகார் கொடுத்த பிறகு குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள்.போலீஸ் விசாரணையில் காக்கா முட்டை ராஜேஷ் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விடுகிறான் .2 சிறுவர்களும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.படம் பார்த்த மாதிரி இல்லை ‌.நிஜக்கதை போல இயக்குனர் இயக்கியிருக்கிறா