பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை பெற்றார் அருணா சாய்ராம் !

இந்திய இசைக்கு சர்வதேச மகுடம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை பெற்றார் அருணா சாய்ராம்

தனக்கு மிகவும் பிடித்த நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்ற விருதை தானும் பெற்றதில் அருணா சாய்ராம் பெருமிதம்

தனது இசைப் பணியால் அற்புதங்களையும் அதிசயங்களையும் படைத்து வரும் திருமதி அருணா சாய்ராம் கர்நாடக இசை உலகின் ராக் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட உயரிய விருதுகளை இதுவரை வென்றுள்ள அருணா சாய்ராம், தற்போது தனக்கும், கர்நாடக இசைக்கும் மட்டுமில்லாமல் இந்திய நாட்டுக்கே பெரும் கௌரவத்தை ஈட்டித் தந்துள்ளார். ஆம், பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய விருதான உலக அளவில் பெரிதும் மதிக்கப்படும் செவாலியர் விருது ஜூலை 15 அன்று அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதற்கு முன்னர் பெற்றது நம் அனைவருக்கும் தெரியும். மும்பையில் சிறு வயது முதல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களை அங்குள்ள திரையரங்குகளில் பேரார்வத்துடன் பார்த்து ரசித்ததை அவர் நினைவுக் கூர்ந்த அருணா சாய்ராம்., நடிகர் திலகத்தின் மிகப் பெரும் ரசிகையான நான், அவர் பெற்ற விருதை பெறுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றார்.

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை தான் பெறுவதற்கு காரணமான தனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...

கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கு­வது சிறந்­ததா?

வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் ! ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷனின் நிதி திரட்டல் நிகழ்ச்சி !

விரைவில் விற்கப்படும் Air India பங்குகள் ?

பேட்டரி கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு ! தமிழக அமைச்சரவை ஒப்புதல் !!

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ?

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?

ஏழு வயதே ஆகும் ரூஹி மொஹஸ்ஸாப் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்தார்!