“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னுரிமை !‘அடவி’ இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு !!

“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னிரிமை அளித்திட வேண்டும்” – ‘அடவி’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சு.‘ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ்’ சார்பாக கே சாம்பசிவம் தயாரிப்பில், ஆழ்வார், திருடா திருடி, கண்ணோடு காண்பதெல்லாம், கிங் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு இயக்குனராக இருந்து திரைப்பட இயக்குனராக உயர்ந்திருக்கும் ரமேஷ் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ‘அடவி’.

இந்த சமுதாயத்தில், ‘இயற்கை வளங்கள் அனைவருடைய தேவைக்கும் போதுமானதாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒருவருடைய பேராசைக்கு கூட அது பத்தாது’ எனும் முதுமொழிக்கேற்ப, இப்படம் இயற்கை, இயற்கையோடு இயைந்து வாழும் மக்கள் என்றிருக்கும் வாழ்க்கை, ஒரே ஒருவரது பேராசையால் என்ன கதிக்கு உள்ளாகிறது என்பதை உணர்வுபூர்வமாக படம் பிடித்து காட்டி இருக்கிறது. வியப்பூட்டும் திருப்புமுனைகளும், பசுமையான காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான அதிரடி காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் விதத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

சென்னையில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஒவ்வொரு துறையிலும் அந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் படக்குழுவுடன் பகிர்ந்துக் கொண்டார். பட்ஜெட்டில் குறைவாகவும், தரத்தில் நிறைவாகவும் இருப்பதாகவும் அவர்களை பாராட்டி மகிழ்ந்தார்.அவர் தொடர்ந்து பேசுகையில், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பண்டிகைக் காலங்களில் வருவது தவிர்க்கப்பட வேண்டும் ஏனென்றால் அவர்களது படம் எப்போது வந்தாலும் வெற்றி பெறும் என்றார். எனவே சிறிய படங்களை ஊக்குவிக்கும் விதமாக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
கதாநாயகன்: வினோத் கிஷன், கதாநாயகி: அம்மு அபிராமி, மற்றும் ராஜபாண்டியன், விஷ்ணு பிரியா, ஆர்.என்.ஆர் மனோகர்,முத்துராமன்,மூணாறு ரமேஷ்,கே சாம்பசிவம், பரிவு சக்திவேல், ஜெயச்சந்திரன், சந்துரு, குணசீலன், தம்பிதுரை, ஆண்ட்ரு உள்ளிட்ட பலர்.
தயாரிப்பு: ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்’ K சாம்பசிவம், இசை: சரத் ஜடா,பாடல்கள்: கலை குமார்,படத்தொகுப்பு: சதீஷ் குரோசோவ்.சண்டை பயிற்சி: சூப்பர் சுப்பராயன்,வடிவமைப்பு: குமார்,ஒப்பனை: பி.வி.ராமு,
தயாரிப்பு மேற்பார்வை: சிவசந்திரன்,ஒளிப்பதிவு & இயக்கம்: ரமேஷ் ஜி,மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Related posts:

இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா : நெகிழும் 'புஜ்ஜி @ அனுப்பட்டி 'திரைப்பட இயக்குநர் ராம் கந்தசாமி !
லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' !
"லவ்" திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு !
தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் 'குற்றம் கடிதல் 2' திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்
டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை !
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் முதல் பாடல் வெளியீடு